நான் யாருக்காகவும் என் திறனை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை ; விராட் கோஹ்லி வெளிப்படை பேச்சு – வீடியோ இணைப்பு

0
550
Virat Kohli

கடந்த ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் முக்கிய பேட்ஸ்மேன்களாக பார்க்கப்படும் ரஹானே மற்றும் புஜாரா இருவரும் அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை. இருப்பினும் இந்திய அணி நிர்வாகம் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்த காரணத்தினால், இந்திய ரசிகர்கள் ஒரு சிலர் கோபம் அடைந்தனர்.

ரசிகர்களின் கோபத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர்கள் இருவரும் மிக சிறப்பாக விளையாடினர். அந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் அவர்கள் இருவரும் மிக சிறப்பாக விளையாடி அரை சதம் குவித்து அசத்தினர். அதன் காரணமாகவே இந்திய அணியால் 200 ரன்களுக்கு மேல் குவித்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தற்பொழுது நடைபெற்ற பிரத்தியேக உரையாடல் ஒன்றில் விராட் கோலி, “கடைசி டெஸ்ட் போட்டியில் புஜாரா மற்றும் ரஹானே இருவரும் சிறப்பாக விளையாடியது பார்க்க மிகவும் அற்புதமாக இருந்தது. அவர்கள் இருவரின் அனுபவம் எங்களுக்கு விலைமதிப்பில்லாதது. மேலும் மாற்றம் என்பது தானாக நிகழவேண்டும் ஒருவரின் வற்புறுத்தலால் அது நிகழ்வது அழகல்ல”, என்று விராட் கோலி அவர்களது ஃபார்ம் குறித்து பேசினார்.

இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய தருணங்களில் நான் ஈடுபட்டுள்ளேன்

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியை நான் பெற்ற பொழுது ஐசிசி தரவரிசையில் இந்திய அணி 7-வது இடத்தில் இருந்தது. இந்திய அணி ஒரு சமயத்தில் 7வது இடத்தில் இருந்தது என்று சொன்னால் யாரும் அவ்வளவு எளிதில் யாரும் நம்பிவிட மாட்டார்கள். ஆனால் யதார்த்தம் அதுதான், அங்கிருந்து இந்திய அணி தற்போது நம்பர் ஒன் அணியாக வெற்றிகரமாக நீண்ட நாட்களாக வலம் வந்து கொண்டிருக்கிறது என்று கேப்டன் விராட் கோலி தற்பொழுது கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் “நான் எந்த ஒரு விஷயத்தை யாருக்காகவும் நிரூபிக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்ததில்லை, இனி இருக்கப் போவதுமில்லை” என்றும், அதில் தான் எப்பொழுதும் உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

- Advertisement -

இந்திய அணிக்காக சிறப்பாக செயல்படுவதில் எப்பொழுதும் என் உள் மனதிற்குள் பெருமையாகவே எண்ணுவேன். கடந்த சில ஆண்டுகளில் இந்திய அணியின் முக்கியமான, தவிர்க்க முடியாத பல தருணங்களில் நான் ஈடுபட்டு உள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

மகேந்திர சிங் தோனி என்னிடம் கூறிய முக்கிய அறிவுரை

மகேந்திர சிங் தோனி என்னிடம் ஒருமுறை”எப்பொழுதும் நாம் செய்யும் ஒரு ஒரு தவறுகளுக்கு இடையே குறைந்தபட்சம் 7 முதல் 8 மாத காலம் இடைவெளி இருந்தாக வேண்டும். அதாவது ஒரு தவறை நாம் இன்று தெரியாமல் செய்து விட்டால், அதற்கடுத்த தவறை நாம் செய்யும் பொழுது இந்த இரு தவறுகளுக்கு இடையில் 7 முதல் 8 மாத கால இடைவெளி இருந்தாக வேண்டும்.

இந்த ஒரு அறிவுரை நீண்ட காலமாக என்னுடன் ஒட்டிக் கொண்டுவரும் அறிவுரையாக நான் பார்க்கிறேன். இவ்வாறு மகேந்திர சிங் தோனி குறித்தும் விராட் கோலி தற்பொழுது பேசியுள்ளார்.