தவறைத் திருத்திக் கொள்ள 7 அல்லது 8 மாதங்கள் ஆகும் ; தோனி தனக்கு வழங்கிய அறிவுரையை பகிர்ந்து கொண்ட விராட் கோலி – வீடியோ இணைப்பு

0
334
Virat Kohli about MS Dhoni advice

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது. இதேபோல சிறப்பாக விளையாடி முதன்முறையாக டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி கைப்பற்றும் என்று ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. அதற்கு முக்கிய காரணம் அந்த போட்டியில் கோலி விளையாடாதது என்று ரசிகர்கள் பெரிதும் கூறினர். முதுகில் ஏற்பட்ட சிறு காயம் காரணமாக விராட் கோலி அந்த போட்டியில் பங்கேற்காமல் இருந்தார். அதற்கு பதிலாக கே எல் ராகுல் அந்த போட்டிக்கு கேப்டனாக செயல்பட்டார். இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியை இழந்ததன் மூலம் தொடர் சமநிலையில் உள்ளது.

தற்போது 3வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி மீண்டும் கேப்டனாக களமிறங்க உள்ளார். டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் விராட் கோலி தோனி கூறிய முக்கியமான அறிவுரை ஒன்றை நினைவு கூர்ந்தார். கோலி பேசும்போது, ” ஒரே தவறை இரண்டு முறை செய்வது என்றால் இரண்டு முறைக்கும் நடுவே ஏழு அல்லது எட்டு மாதம் இடைவெளி இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அதிக காலம் விளையாட முடியும்” என்று தோனி கூறியதாக கூறினார். மேலும் இன்று வரை அந்த அறிவுரையை தான் அதிகமாக மதித்து வருவதாகவும் கூறியுள்ளார் கோலி.

- Advertisement -

டெஸ்ட் போட்டிகளில் வரிசையாக ஒரே மாதிரியாக தன்னுடைய விக்கெட்டை இழந்து வரும் கூறி தற்போது தோனி கூறியது இந்த அறிவுரையை நினைவு கூர்ந்தது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். மீண்டும் இதே போல அவுட்டாகாமல் விளையாட வேண்டும் என்ற எண்ணத்தை நிச்சயம் இந்த அறிவுரை மீண்டும் கோலி மனதில் விதைத்திருக்கும். இதனால் மீண்டும் விராட்கோலி பழைய ஃபார்முக்கு திரும்பி சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நீண்ட காலமாக ரசிகர்களை காக்க வைத்திருக்கும் அந்த 71வது சதமும் சீக்கிரம் வந்துவிடும் என்று எதிர்பார்த்து விராட் கோலியின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்