ஆட்டத்திற்கு நடுவே புஷ்பா படத்தில் ஶ்ரீவள்ளி ஸ்டெப் போட்ட விராட் கோலி – சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ இணைப்பு

0
2988
Virat Kohli Srivalli Step

இந்திய அணி தற்போது மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட தொடர் ஆக நடக்கும் இந்த தொடரில் ரோகித் முழுநேர ஒருநாள் போட்டிகளின் கேப்டனாக பொறுப்பு எடுத்துக் கொண்டுள்ளார். ரோகித்தின் தலைமைப் பண்பு சிறப்பாக இருந்துவரும் உலக கோப்பை தொடரில் வெற்றி பெற்று கொடுக்குமா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்தத் தொடரின் இரண்டாவது ஆட்டம் நேற்று நடைபெற்றது. முதல் போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றதும் இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி சற்று போராட்டத்தை வெளிப்படுத்தியது.

இந்திய அணியின் டாப் 3 வீரர்களை மிகவும் குறைவான ஸ்கோருக்கு அவுட்டாகி மொத்த இந்திய அணியையும் 237 ரன்களை மட்டுமே எடுக்க விட்டது மேற்கிந்திய தீவுகள். சூரியக்குமார் மற்றும் ராகுல் சிறப்பாக விளையாடினர். அதன் பின்பு வந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்டிங் வீரர்கள் இந்திய அணியின் வேகத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் சரிந்தனர். கடைசி கட்டத்தில் அந்த அணியின் ஆல் ரவுண்டர் ஓடியன் ஸ்மித் சில அதிரடி ஷாட்டுகளை ஆட இந்திய ரசிகர்கள் மத்தியில் பதட்டம் தொற்றிக்கொண்டது.

- Advertisement -

இந்நிலையில் வாஷிங்டன் சுந்தரை பந்துவீச வைத்து ஓடியன் ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்தினார் ரோகித். ஓடியன் ஸ்மித் பந்தை தூக்கி அடிக்க அதை சிறப்பாக விராட் கோலி கேட்ச் பிடித்தார். கேட்ச் பிடித்த சில நேரத்திற்கு பிறகு விராட் கோலி புஷ்பா திரைப்படத்தில் வரும் ஸ்ரீ வள்ளி பாடலுக்கு அல்லு அர்ஜுன் ஆடியது போல களத்தில் சிறிது ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தப் பாடலின் நடனக்காட்சி பல இடங்களில் பிரமாண்ட வெற்றியைப் பெற்று வருகிறது.

இந்தியா மட்டுமல்லாது பாகிஸ்தான் வங்கதேசம் போன்ற நாடுகளிலும் இந்த பாடலுக்கு நடனமாடி சமூக வலைதளங்களில் கிரிக்கெட் வீரர்கள் பகிர்ந்து வருகின்றனர். ரஷித் கான், டுவைன் பிராவோ, டேவிட் வார்னர் ஏற்கனவே இந்த பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்ட நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி களத்திலேயே இந்த பாடலுக்கு ஆடியதை ரசிகர்கள் மிகவும் கொண்டாடி வருகின்றனர். மேலும் விராட் கோலி வழக்கம்போல மிகவும் மகிழ்ச்சிகரமாக இருப்பதாகவும் விரைவில் அவருடைய அதிகம் எதிர்பார்க்கப்படும் 71வது சதம் வந்துவிடும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.