போட்டி முடிந்து கிளம்பும் போது தன் ரசிகர்களுக்குப் பறக்கும் முத்தங்கள் தந்த விராட் கோலி – வீடியோ இணைப்பு

0
236
Virat Kohli flying kiss

ஐ.பி.எல் 15-வது சீசனில், டபுள் ஹெட்டர் நாளான இன்று, தொடரின் 36வது ஆட்டத்தில், பெங்களூர் ராயல் சேலன்ஞர்ஸ் அணியும், ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும், மும்பையின் ப்ரோபோர்ன் மைதானத்தில் மோதிய போட்டி ஒருபக்க ஆட்டமாக முடிந்துள்ளது.

ராயல் சேலன்ஞர்ஸ் பெங்களூர் அணி புள்ளி பட்டியலில், ஏழு ஆட்டங்களில் ஐந்தில் வென்று பத்துப் புள்ளிகளோடு இரண்டாவது இடத்தில் இருந்தது. ஆறு ஆட்டத்தில் நான்கை வென்று எட்டுப் புள்ளிகளோடு ஹைதராபாத் ஐந்தாமிடத்தில் இருந்தது. இரண்டு அணிகளிலும் எந்த மாற்றங்களும் இல்லை!

- Advertisement -

முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் பீல்டிங்கை தேர்வு செய்ய, பெங்களூர் அணியின் ஓபனர்களாக வந்தனர். இதையடுத்து அடுத்தடுத்து பாஃப், விராட், அனுஜ் ராவத், மேக்ஸ்மெல், பிரபுதேசாய், தினேஷ் கார்த்திக், ஷாபாஸ் அகமத் என ஏழு விக்கெட்டுகள் 49 ரன்களுக்கே இழந்து விட்டது பெங்களூர் அணி.
இதில் நடராஜன் வீசவந்த ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரில் மேக்ஸ்வெல்லை வெளியேற்றினார். இதற்கடுத்து இணைந்தவர்களும் நிலைத்து நிற்காமல் இறுதியாக 68 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, இந்தத் தொடரின் குறைந்தபட்ச ரன்னை பதிவு செய்தது.

இதற்கடுத்து களம் இறங்கிய ஹைதராபாத் அணியின் ஓபனர்கள் அபிஷேக் ஷர்மாவும் வில்லியம்சனும் வேகமாக வெற்றிக்காக ஆட, வெற்றிக்கு ஐந்து ரன்கள் இருக்கும் போது அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். அடுத்து ராகுல் திரிபாதி வர, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

இதற்கடுத்து ஆட்டம் முடிந்து பெங்களூர் அணியினர் வெளியேறியபோது, கடந்த இரண்டு ஆட்டங்களாக முதல் பந்தில் கோல்டன் டக் அடித்த விராட்கோலி, மைதானத்தில் இருந்த இரசிகர்களைப் பார்த்து சிரித்தபடி பறக்கும் முத்தங்களை தந்து சென்றார். படுதோல்விக்குப் பிறகு விராட்கோலியின் இரசிகர்களுக்கான இந்தச் செயல் நகைச்சுவையாகவும், நெகிழ்ச்சியாகவும் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது!

- Advertisement -