கமலேஷ் நாகர்கோட்டியை வம்பிழுத்த இங்கிலாந்து ரசிகர்கள் ; தக்க பதிலடி கொடுத்த விராட் கோலி – வீடியோ இணைப்பு

0
198
Virat Kohli and England Fans

இந்திய அணி கடந்த ஆண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்திருந்தது. முதல் டெஸ்ட் டிராவாக, இரண்டாவது டெஸ்டில் இந்தியாவும், மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்தும், நான்காவது டெஸ்டில் இந்தியாவும் வென்று, தொடரில் இந்திய அணி 2-1 என முன்னணியில் இருக்க, கடைசி ஐந்தாவது போட்டி கோவிட் தொற்று காரணமாக நிறுத்தப்பட்டது!

தற்போது இந்திய அணி இங்கிலாந்திற்கு மூன்று டி20 மற்றும், மூன்று ஒருநாள் போட்டிகளோடு சேர்த்து, கடந்த வருடம் கோவிட் தொற்றால் தடைப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாட இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளது!

இந்த டெஸ்ட் போட்டி வருகிற ஜூன் 1 முதல் 5 வரை எட்பஜ்ஸ்டன், பர்மிங்ஹாமில் நடக்க இருக்கிறது. இதற்கான நான்கு நாள் பயிற்சி போட்டியில் இந்திய அணி லீசெஸ்டர்சையர் இங்கிலாந்து கவுன்டி அணியோடு மோதி வருகிறது. இந்திய வீரர்கள் அனைவரும் பயிற்சி பெறும் வகையில், லீசெஸ்டர்சையர் அணியிலும் இந்திய வீரர்கள் சிலர் இடம்பெற்று ஆட, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் லீசெஸ்டர்சையர் அணியோடு இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்பந்தம் செய்திருக்கிறது.

இந்த நான்கு நாள் பயிற்சி போட்டி நேற்று முன்தினம் லீசெஸ்டர் கிரேஸ் ரோட் மைதானத்தில் துவங்க, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 246 எடுத்து டிரா செய்தது. அடுத்து நேற்று லீசெஸ்டர்சையர் அணி பேட்டிங் செய்தது. அப்பொழுது இந்திய அணியின் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராகச் சென்றுள்ள கமலேஷ் நாகர்கோட்டி பீல்டிங்கிற்கு வந்தார். அவர் பீல்டிங் செய்யும்போது சில இங்கிலாந்து இரசிகர்கள் அவரிடம் வம்பு செய்ய, இதைக்கண்ட விராட்கோலி கோபமடைந்து “அவர் இதற்காகத்தான் இங்கு வந்தாரா?” என்று வம்பு செய்த இங்கிலாந்து இரசிகர்களிடம் கொந்தளித்து விட்டார்.

தற்போது இதுக்குறித்து இரசிகர்கள் பால்கனியில் நின்றிருந்த விராட்கோலியிடம், அவரோடும் கமலேஷ் நாகர்கோட்டியோடும் புகைப்படம் எடுக்க வேண்டுமென்றும், இன்று ஏன் கமலேஷ் நாகர்கோட்டி களத்திற்கு வரவில்லை என்றும் பல கேள்விகளைக் கேட்டனர். அதற்குச் சில கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்தார். இரசிகர் ஒருவர் இதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிய, தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஒரு விராட்கோலி இரசிகர் சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து, விராட்கோலி சூர்யகுமார் யாதவிடம் கோபமாக நடந்துகொண்டார் என்று பேசுபவர்கள், இதே விராட் கோலி கமலேஷ் நாகர்கோட்டிற்காக பேசியது பற்றியெல்லாம் பேசுவதில்லை என்று கூறியிருக்கிறார்!