சோர்ந்துபோன இளம் வீரரை தட்டி கொடுத்து ஊக்கப்படுத்திய விராட் கோலி

0
248
Ishan Kishan and Virat Kohli

ஐபிஎல் தொடர் அமீரகத்தில் உள்ள மூன்று மைதானங்களில் தற்போது நடந்து வருகிறது. இந்தியாவில் நடக்க வேண்டிய தொடர் கொரோனா காரணமாக தற்போது அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்த ஆட்டத்தின் நேற்றைய போட்டியில் பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் மோதின. இந்த போட்டியில் வெல்லும் அணி மூன்றாவது இடத்தை புள்ளிப் பட்டியலில் பெற்றுவிடலாம் என்பதால் இரண்டு அணிகளும் வெற்றியை ஒன்றே குறிக்கோளாக கொண்டு ஆடினர். முதலில் பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு.

பெங்களூரு அணிக்கு கிளன் மேக்ஸ்வெல் மற்றும் விராட் கோலி இணைந்து அரைசதம் அடித்தனர். மிடில் ஓவர்களில் 2 பேரும் தேவைக்கு ஏற்ப பவுண்டரிகளும் அதே நேரத்தில் ஒன்று இரண்டு என ரன்களும் ஓடினர். கடைசி நேரத்தில் பெங்களூரு அணியின் வீரர்கள் சிறிது சொதப்பினாலும் பெங்களூரு அணி 165 ரன்கள் எடுத்து நல்ல ஸ்கோரை பதிவு செய்தது.

இதன் பிறகு ஆடிய மும்பை அணிக்கு சிறப்பான துவக்கம் கிடைத்தாலும் அதன் பிறகு மிடில் ஆடர் வீரர்கள் ஒருவர் கூட நன்கு ஆடவில்லை. தேவையற்ற ஷாட்டுகள் விளையாடி முக்கியமான நேரத்தில் அவுட் ஆகி பெவிலியன் திரும்புவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர் மும்பை அணியின் வீரர்கள். இதன் காரணமாக மும்பை அணி வெறும் 111 ரன்கள் மட்டுமே எடுத்து மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. புள்ளி பட்டியலிலும் ஏழாவது இடத்திற்கு இதன் காரணமாக சென்றது மும்பை அணி.

மும்பை அணியின் இந்த முக்கிய தோல்விக்கு காரணம் மிடில் ஆடர் வீரர்கள் கண்கள் சேர்க்காதது தான். சூரிய குமாருக்கு முன்பதாக களமிறக்கப்பட்ட இஷான் கிஷன் பொறுப்புடன் ஆடாமல் தேவையற்ற ஷாட் ஒன்றை ஆடி அவுட்டானார். இதன் காரணமாகவே மும்பை அணியின் மோசமான மிடில் ஆடர் களமிறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த ஆட்டத்தில் மட்டும் என்றில்லாது இந்த தொடர் முழுக்கவே கிஷனின் ஆட்டம் சரியாக செல்லவில்லை.

கடந்த தொடரில் மிக மிக சிறப்பாக விளையாடிய கிஷன் இந்த தொடரில் ரன்கள் சேர்க்க திணறி வருவது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும். காரணம் டி20 உலக கோப்பை தொடர் அணியில் கிஷன் இடம்பெற்றுள்ளார். தன்னால் பெரிதாக ரன்கள் சேர்க்க முடியவில்லை என்று வருத்தத்தோடு அமர்ந்திருந்த இஷன் கிஷனை இந்திய அணியின் தற்போதைய கேப்டன் விராத் கோலி தன்னுடன் அழைத்து சிறிது நேரம் அவருக்கு ஊக்கம் கொடுத்தார். கிச்சனுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி அவரை மீண்டும் உற்சாகமாக்க வழிவகை செய்தார் கோலி.

இதன் பிறகாவது இஷன் கிஷன் தனது பழைய ஃபார்மை கையில் எடுத்து வர இருக்கும் போட்டிகளில் மும்பை அணிக்கு சிறப்பாக விளையாடுவாரா என்று காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.