ஆட்டத்திற்கு இடையில் புஷ்பா திரைப்பட நாயகன் அல்லு அர்ஜுன் ஸ்டெயிலை செய்து மகிழ்ந்த விராட் கோலி – வீடியோ இணைப்பு

0
103
Virat Kohli Pushpa Style

இந்திய அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இந்த அணிக்கு எதிராக விளையாடிய டி20 தொடரில் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளை ஒயிட் வாஷ் செய்த ரோகித் தலைமையிலான இந்திய டி20 அணி இலங்கை அணி வெல்லும் ஒயிட் வாஷ் செய்தது. டி-20 தொடரை முடித்த கையோடு இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா தொடங்கியுள்ளது. மூன்றுவித கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்கு நிரந்தர கேப்டனாக ரோகித் நியமிக்கப்பட்ட பின்பு பங்கேற்கும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும். மேலும் இந்திய அணியின் நட்சத்திர பேட்டிங் வீரரான விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டி இதுவாகும். இத்தனை காரணங்கள் இருப்பதால் இந்த டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் மற்றும் மயங்க் வேகமாக ஆட்டம் இழந்தாலும் அதன் பின்பு வந்த வீரர்கள் சிறப்பாக விளையாடினர். விகாரி, பண்ட் மற்றும் அஸ்வின் ஆகியோர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். ஜடேஜா மிக மிக சிறப்பாக விளையாடி 175 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி 45 ரன்கள் எடுத்தார். 130 ஓவர்ள் விளையாடிய இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 574 ரன்கள் எடுத்தது.

அதன்பின்பு விளையாடிய இலங்கை அணி இரண்டு இன்னிங்சிலும் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரின் சூழலில் சிக்கியது. இந்த இருவர் மட்டுமே இலங்கை அணியின் 20 விக்கெட்டுகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இலங்கை சார்பாக முதல் இன்னிங்சில் நிசங்காவும் இரண்டாவது இன்னிங்சில் டிக்வெல்லாவும் அரைசதம் அடித்தனர். இறுதியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நீண்ட காலமாக சதம் அடிக்காமல் இருக்கும் விராட் கோலி இந்த முறை அடிப்பார் என்று நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இருந்தாலும் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் வருவது போல சில மணித்துளிகள் களத்தில் செயல்பட்டார் விராட் கோலி. பல இடங்களில் புஷ்பா திரைப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் இந்த ஸ்டெப் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.