ரிவ்வியூவில் தப்பித்த எல்கர் ; கடுப்பான விராட் கோலி, அஷ்வின் மற்றும் ராகுல் ஸ்டெம்ப் மைக்கில் பேச்சுவார்த்தை – வீடியோ இணைப்பு

0
2558
Virat Kohli Speaking in Stump Mic after Elgar LBW

இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் இவ்விரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்ற நிலையில் தொடர் வெற்றியை தீர்மானிக்கும் இறுதி போட்டி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்திய அணி நிர்ணயித்த 212 ரன் இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்கா அணி தற்போது விளையாடி வருகிறது.

அதிர்ஷ்டவசமாக தப்பிய டீன் எல்கர்

20 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்திருந்தது. எல்கர் 21 ரன்னிலும் கீகன் பெட்டர்சன் 16 ரன்னிலும் விளையாடிக் கொண்டு இருந்தனர்.21ஆவது ஓவரை ரவிச்சந்திரன் அஸ்வின் வீசினார்.

அந்த ஓவரின் 4வது பந்தில் அஸ்வினின் மாயாஜால சூழலில் பந்து எல்கரின் லெக் கார்டில் பட்டது. களத்தில் இருந்த நடுவர் எராஸ்மஸ் உடனே விரைந்து அவுட் கொடுத்தார். தனக்குக் அவுட் கொடுத்த சில நொடிகளிலேயே டீன் எல்கர் ரிவ்யூ எடுத்தார்.

மூன்றாவது நடுவர் எல்பிடபிள்யூ முறைப்படி எல்கர் அவுட் ஆகி உள்ளாரா என மறுஆய்வு செய்து பார்க்கையில், பந்து ஸ்டம்ப்பில் படாமல் சற்று உயரமாக சென்றது. பந்து ஸ்டும்ப்பில் நிச்சயமாக அடித்து இருக்கும் என்று அனைவரும் உறுதியாக இருந்த நிலையில், மறுஆய்வில் பந்து படாமல் போனது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அதனால் டீன் எல்கரும் அவுட் ஆகாமல் தப்பித்துக் கொண்டார்.

விரக்தியில் பேசிய விராட் கோலி ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் கே எல் ராகுல்

மூன்றாம் நடுவர் செய்த மறு ஆய்வின் முடிவில் பந்து படாமல் போன உடனேயே, கள நடுவர் எராஸ்மஸ் இதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறினார்.உடனே அங்கே இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின், “நீங்கள் வெற்றி பெற இன்னும் சிறந்த வழிகளை தேட வேண்டும்” என்று கூறினார்.

அவருக்கு பின் விராட் கோலி ஸ்டம்ப் மைக்கில் அனைவருக்கும் கேட்கும்படி “உங்களது அணி மீதும் சற்று கவனம் செலுத்துங்கள். எல்லா நேரத்திலும் நீங்கள் மற்றவர்களை பிடித்து போட பார்க்கிறீர்கள்” என்று கூறினார். இறுதியாக கேஎல் ராகுல், “ஒட்டுமொத்த நாடும் 11 வீரர்களுக்கு எதிராக விளையாடிக் கொண்டிருக்கிறது” என்று கூறினார்.

சிறப்பான நிலையில் உள்ள தென் ஆப்பிரிக்க அணி

மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் குவித்துள்ளது. மார்க்ரம் 16 ரன்கள் எடுத்த நிலையிலும், எல்கர் 30 ரன்கள் எடுத்த நிலையில் இன்று அவுட்டாகி உள்ளனர். களத்தில் கீகன் பெட்டர்சன் 48* எடுத்து அவுட் ஆகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் வேளையில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற மேலும் 111 ரன்கள் தேவை.