டி காக்குக்கு 109 கீ.மு வேகத்தில் பவுன்சர் பந்து வீசி அனைவரையும் ஆச்சரியப்படுத்திய ஸ்பின்னர் வருன் சக்ரவர்த்தி – வீடியோ இணைப்பு

0
111
Varun Chakravarty bouncer to de kock

நடப்பு ஐ.பி.எல் தொடரில் 66வது ஆட்டத்தில், கொல்கத்தா அணியும், லக்னோ அணியும், நவிமும்பையின் டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. லக்னோ அணி 13 ஆட்டங்களில் 8 வெற்றிகளோடு, 16 புள்ளிகளைப் பெற்று, புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. கொல்கத்தா அணி 13 ஆட்டங்களில் 6 ஆட்டங்களில் வென்று, 12 புள்ளிகளோடு, புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறது.

முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்து, லக்னோ அணியின் பேட்டிங்கை துவங்க குயின்டன் டிகாக்கோடு வந்தார் கே.எல்.ராகுல். இந்த இருவரும் மிக பொறுமையாகவே ஆட்டத்தை அணுகி பவர்-ப்ளேவில் விக்கெட் இழப்பில்லாமல் 44 ரன்களை கொண்டுவந்தார்கள்.

- Advertisement -

இதற்குப் பிறகு ஆட்டத்தில் வேகத்தை அதிகரிக்க வேண்டிய நெருக்கடி இரண்டு பேட்ஸ்மேன்ஸ்களுக்குமே இருந்தது. ஆனால் கொல்கத்தா பவுலர்கள் லக்னோ அணியின் இந்த ஜோடாயை அவ்வளவு எளிதாய் ரன்களை அடிக்கவிடவில்லை. விக்கெட்டுகள் விழாமலும் ரன்னும் வராமலும், அதேசமயத்தில் ஆட்டம் எந்தப் புறமும் சாயாமல் நடுவிலேயே சென்றது.

இந்த நிலையில் பேட்டிங்கில் வேகத்தை அதிகரிக்க வேண்டி, குயின்டன் டிகாக் வருண் சக்ரவர்த்தியின் ஆட்டத்தின் எட்டாவது ஓவரை தாக்க போனார். அதற்குத் தகுந்தவாறு ஓவரின் இரண்டாவது பந்தில் பவுண்டரி வந்ததோடு, அதற்கடுத்த பந்தை வருண் சக்ரவர்த்தி நோ-பாலாக வீச, மூன்று ரன்களும் கிடைத்தது, இதற்கடுத்த பிரி-ஹிட் பந்தை பவுண்டரியாவது அடித்துவிட எதிர்பார்த்து நின்றார் குயின்டன் டிகாக்.

இங்குதான் பந்துவீச்சில் ஆச்சரியப்படுத்தினார் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி. பொதுவாக வேகம் குறைவாக வீசும் வருண் சக்ரவர்த்தி அந்தப் பந்தை 109 கி.மீ வேகத்தில் வீசி திகைக்க வைத்தார். இதை குயின்டன் டிகாக் மட்டுமல்ல, விக்கெட் கீப்பர் சாம் பில்லிங்சும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஒருவாறாகச் சமாளித்துப் பிடித்தார். இந்த ஆட்டத்தில் ஆரம்பத்தில் இறுக்கிப் பிடித்த கொல்கத்தா பந்துவீச்சாளர்களால், இறுதியில் லக்னோவின் துவக்க ஆட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கடைசி ஐந்து ஓவர்களில் லக்னோ அணி 88 ரன்களை குவித்ததோடு, ஒரு விக்கெட்டை கூட இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -