வீடியோ: பெயில்ஸ் சிக்ஸ் போனதெல்லாம் எங்கேயாவது பார்த்திருக்கோமா? – 150கிமி வேகத்தில் வீசி நியூசிலாந்து பேட்ஸ்மேன் போல்டை தெறிக்கவிட்ட உம்ரான் மாலிக்!

0
15502

பெயில்ஸ் தெறித்து பவுண்டரி போகும் அளவிற்க்கு வேகமாக பந்துவீசி போல்டாக்கிய உம்ரான் மாலிக் வீடியோ கீழே காணலாம்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டிசைடர் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது. ஷுப்மன் கில் 63 பந்துகளில் 123 ரன்களும், ராகுல் திரிப்பாதி 22 பந்துகளில் 44 ரன்களும் அடித்தனர். ஹர்திக் பாண்டியாவும், சூரியகுமார் யாதவும் நல்ல பங்களிப்பை கொடுத்தனர். 20 ஓவர்களில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

சிக்கலான இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி ஆரம்பத்தில் இருந்தே சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். குறிப்பாக பவர்-பிளே ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே எடுத்து ஐந்து விக்கெட்டுகளை இழந்தது.

நியூசிலாந்து அணியால் கௌரவமான ஸ்கோர் எட்ட முடியாமல், வரிசையாக விக்கெட்டுகள் இழந்து 66 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 168 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி.

போட்டியின் 5வது ஓவரை உம்ரான் மாலிக் வீச மைக்கல் ப்ரேஸ்வெல் எதிர்கொண்டார். முதல் பந்தை 148.9கிமி வேகத்தில் வீசினார்.அதை அடிக்க முடியாமல் விட்டார். அடுத்த பந்தை 150கிமி வேகத்தில் வீசினார். அதை அடிக்க முயற்சி செய்து தவரவிட்டார். ஆனால் போல்டை பதம்பார்த்தது. அப்போது பெயில்ஸ் தெறித்து 30 யார்ட்டு வட்டத்தை தாண்டி சென்றது.

- Advertisement -

அதன் வீடியோ: