20வது ஓவரின் 4வது பந்தில் 157 கி.மீ வேகப்பந்து வீசி வரலாற்று சாதனை படைத்துள்ள உம்ரான் மாலிக் – வீடியோ இணைப்பு

0
3430
Umran Malik 157 kmph delievery

2022 ஐ.பி.எல் சீசனின் 50வது போட்டியில் கேன் வில்லியம்சனின் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும், ரிஷாப் பண்ட்டின் டெல்லி கேபிடல்ஸ் அணியும், மும்பையின் ப்ராபோர்ன் மைதானத்தில் தற்போது பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளி பட்டியலில் ஐந்தாம் இடத்திலும், டெல்லி கேபிடல்ஸ் அணி ஏழாவது இடத்திலும் இருக்கின்றன. முதலில் டாஸில் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். டெல்லி அணிக்குத் துவக்கம் தர பிரித்வி ஷாவிற்கு பதிலாக மன்தீப் சிங் வந்தார். வழக்கம்போல் வார்னரும் வந்தார்.

- Advertisement -

மன்தீப் சிங்கும், அடுத்து வந்த மிட்ச்செல் மார்சும் வேகமாக வெளியேற, வார்னர், ரோமன் பவெல் இருவரும் சேர்ந்து விளாசி தள்ள ஆரம்பித்துவிட்டனர். குறிப்பாக உம்ரான் மாலிக்கின் ஓவர்களை குறிவைத்து ருதுராஜ் போல வார்னர் வெளுக்க ஆரம்பித்து விட்டார் ஒருமுனையில் நின்ற பவெலும் நொறுக்க ஆரம்பித்துவிட்டார்.

பந்தில் அடி விழ விழ உம்ரான் மாலிக்கின் வேகமும் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. ஆட்டத்தின் இருபதாவது ஓவரை வீசிய உம்ரான் மாலிக், அந்த ஓவரின் நான்காவது பந்தை மணிக்கு 157 கி.மீ வேகத்தில் வீசினார். இதுதான் இந்தத் தொடரின் அதிவேகமான பந்து. அடுத்த பந்தை மணிக்கு 156 கி.மீ வேகத்தில் வீசினார். இது இந்தத் தொடரின் இரண்டாவது அதிவேகமான பந்து. இந்தத் தொடரில் பந்து வீச்சு வேகத்தில் உம்ரான் மாலிக் காட்டும் வெறி கூடிக்கொண்டே போகிறது.

ஒட்டுமொத்த ஐ.பி.எல் தொடரில் அதிவேகமான முதல் ஐந்து பந்துகள்

ஷான் டைய்ட் – 157.3 கி.மீ
உம்ரான் மாலிக் – 157 கி.மீ
அன்ரிச் நோர்க்யா – 156. 2 கி.மீ
உம்ரான் மாலிக் – 156 கி.மீ
அன்ரிச் நோர்க்யா – 155. 2 கி.மீ

- Advertisement -