கடைசி ஓவரில் 1 ரன் கூட விட்டுக் கொடுக்காமல் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய உம்ரான் மாலிக் – வீடியோ இணைப்பு

0
2973
Umran Malik SRH

ஐ.பி.எல். பதினைந்தாவது சீசனின், ஞாயிறு டபுள் ஹெட்டர் முதல் போட்டியில், ஷிகர் தவானின் பஞ்சாப் அணியும், கேன் வில்லியம்சனின் ஹைதராபாத் அணியும், நவி மும்பையின் டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் மோதி வருகின்றன!

இப்போட்டியில் முதலில் டாஸை வென்ற ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி மயங்க் அகர்வால் இன்றைய போட்டியில் இல்லாததால், தலைமையேற்றிருந்த தவானும், பிரப் சிம்ரனும் பஞ்சாப் பேட்டிங்கை துவங்க வந்தார்கள்.

ஷிகர் தவான்-ப்ரப் சிம்ரன் துவக்க ஜோடி பஞ்சாப்புக்கு ஏமாற்றமளிக்க, பேர்ஸ்டோவும் ஏமாற்றினார். ஆனால் ஒருமுனையில் நின்றதோடு அதிரடியாகவும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் லியாம் லிவிங்ஸ்டன் இருந்து ஆட பஞ்சாப் அணி இருபது ஓவர்களின் முடிவில் 151 ரன்களை எடுத்தது.

170 ரன்களுக்கு மேல் அடிக்குமென்றிருந்த பஞ்சாப்பை, ஹைதராபாத் வேகப்பந்து வீச்சாளர்கள் இறுதியாக சிறப்பாக மடக்கினார்கள். குறிப்பாக இந்தியாவின் அதிவேக பவுலரான இளம்வீரர் உம்ரான் மாலிக் இறுதி ஓவரில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு, மெய்டனாகவும். இதில்லாமல் இந்த ஓவரில் ஒரு ரன்-அவுட் கிடைத்ததும், கடைசி ஐந்து ஓவர்களில் பஞ்சாப்புக்கு 29 ரன் மட்டுமே கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது!