அமெரிக்க – கனடா மகளிர் டி20 ஆட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியதற்கு அவுட் கொடுக்காமல் மௌனம் காத்த நடுவர் – கடுங்கோபத்தில் அமெரிக்க அணி ரசிகர்கள்

0
58
Canada Woman Cricketer Obstructing the Field

அமெரிக்க நாட்டில் நாளுக்கு நாள் கிரிக்கெட்டின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அமெரிக்க அணியில் உள்ள பல்வேறு இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அது மட்டுமின்றி வெளிநாடுகளில் கிரிக்கெட் விளையாடி வந்த வீரர்கள் தங்களது நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்து, அங்கே அமெரிக்க அணிக்காக கிரிக்கெட் விளையாடி வருகின்றனர்.

அமெரிக்காவில் தற்போது பல்வேறு லீக் தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. போகிற போக்கை பார்க்கையில் இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் அமெரிக்க அணியும் ஆதிக்கம் செலுத்தும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

அமெரிக்க மற்றும் கனடா மகளிர் அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டி

சமீபத்தில் அமெரிக்க மற்றும் மகளிர் அணிகளுக்கு இடையே 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தி முடிக்கப்பட்டது. போட்டியின் முடிவில் 7 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்க மகளிர் அணி தோல்வி அடைந்தது. டாஸ் வென்ற அமெரிக்க மகளிர் அணி கன்னடா மகளிர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

20 ஓவர் முடிவில் 85 ரன்களை கனடா மகளிர் அணி குவித்தது. அதன் பின்னர் களமிறங்கிய விளையாடிய அமெரிக்க மகளிர் அணியால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதன் காரணமாக 7 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்க மகளிர் அணி கனடா மகளிர் அணியிடம் தோல்வி அடைந்தது.

போட்டியில் முக்கியமான நேரத்தில் மௌனம் காத்த நடுவர்

கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன் பீல்டிங் செய்து கொண்டிருக்கும் எதிரணி வீரர்களுக்கு இடைஞ்சலாக (அவர் அடித்த பந்தை பிடிக்க முயற்சிக்கும் பொழுது) நடந்து கொள்ளும் வேளையில் நடுவர் அந்த பேட்ஸ்மேனுக்கு அவுட் என்ற டெசிஷனை கொடுப்பார். இம்மாதிரியான நிகழ்வுகள் நாம் நிறைய கண்டும் இருக்கிறோம். அதேபோல ஒரு நிகழ்வு இந்த இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியிலும் நிகழ்ந்தது.

முதல் ஓவரில் கன்னட மகளிர் அணியின் வீராங்கனை திவ்யா சக்சேனா பந்தை அடுத்த வேலையில், பந்து எட்ஜ் ஆகி உயரத்துக்கு சென்றது. அந்த பந்தை பிடிக்க முயற்சி செய்த அமெரிக்க மகளிர் அணி வீரர்களை, தான் அடித்த பந்தை பிடிக்க விடாத வண்ணம் திவ்யா நடந்து கொண்டார். அதன் காரணமாக அமெரிக்க மகளிர் அணி வீரர்களால் அந்த பந்தை பிடிக்க முடியவில்லை.

கேட்ச் பிடிக்க முயற்சி செய்த வீரர்களுக்கு இடைஞ்சலாக இருந்த திவ்யா சக்சேனாவுக்கு நடுவர் அவுட் டெசிஷனும் கொடுக்காததால், அமெரிக்க மகளிர் அணி வீரர்கள் கோபம் அடைந்தனர். பின்னர் தொடர்ந்து விளையாடிய திவ்யா 45 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார். அவர் அடித்த ரன்களே கனடா மகளிர் அணியை வெற்றி பெறச் செய்தது. நடுவரின் இந்தப் பாரபட்சம் முடிவால் அமெரிக்க மகளிர் அணி தோல்வியடைந்தது அதன் ரசிகர்களையும் கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.