கிரிக்கெட்

முதலில் அவுட் கொடுத்து விட்டு பிறகு உடனே அதை மாற்றிய நடுவர் – பிக் பேஷ் தொடரில் ருசிகரம்

ஆஸ்திரேலியா நாட்டில் தற்போது பிக் பேஷ் தொடர் நடந்து வருகிறது. மாக்ஸ்வல், பில்லிங்ஸ், ரஷித் கான், சிடில் போன்ற சிறந்த வீரர்கள் இந்த தொடரில் விளையாடி வருவதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. உலக கோப்பைக்கு முன்பு கடைசியாக நடந்த 5 டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி வரிசையாக தோல்வியை தழுவியுள்ளதால் புதிய வீரர்களை வரும் தொடர்களில் நிச்சயம் ஆஸ்திரேலிய அணி முயற்சி செய்யும். இதற்கு பிக்பாஷ் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் நிச்சயம் தேர்வு செய்யப்படுவார்கள். அதனால் பல இளம் வீரர்கள் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

- Advertisement -

சமீப காலமாகவே சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமாக பேசப்படும் விஷயங்களுள் ஒன்று அம்ப்பயரிங். நடுவர்களின் தரம் சிறப்பானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு அதிகமாக இருந்த வண்ணமே உள்ளன. இதற்கு வலு சேர்க்கும் விதமாக இன்றைய பிக் பேஷ் தொடரில் ஆட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மெல்போர்ன் மற்றும் பெர்த் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தின் 14-வது ஓவரில் மெல்போர்ன் பந்துவீச்சாளர் சேவியர் வீசிய பந்து டர்னர் என்ற பேட்டிங் வீரரின் ஹெல்மெட்டில் பட்டு கேட்ச் ஆனது. இந்தப் பந்து பேட்டில் பட்டு இருக்கலாம் என்று சந்தேகித்து பந்துவீச்சாளர் நடுவரிடம் அவுட் கேட்டதற்கு உடனே அவர் அவுட் என்று தனது விரலை தூக்கினார். ஆனால் சில நொடிகளிலேயே இல்லை தான் தவறான முடிவை அறிவித்து விட்டேன் என்றும் இது அவுட் இல்லை என்று தன்னுடைய முடிவை மாற்றி அறிவித்தார். இதற்கு காரணம் பேட்டிங் வீரர் டர்னர் உடனே பந்து பேட்டில் படவில்லை ஹெல்மெட்டில் தான் பட்டது என்று நடுவருக்கு சைகை மூலம் உணர்த்தினார். இதனை புரிந்து கொண்ட நடுவர் தன்னுடைய முடிவை மாற்றி அறிவித்தார்.

மெல்போன் வீரர்கள் கொண்டாட்டத்தை தொடங்கிய நிலையில் இப்படி நடுவர் முடிவை மாற்றியது பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. சர்வதேச ஆட்டங்களில் குறுகிய ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டத்தின் முடிவு தீர்மானிக்கப்படுவது நடுவர்கள் இது போன்று இல்லாமல் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Published by