கடைசி பந்தில் 6 ரன்கள் தேவை ; இமாலய சிக்ஸர் அடித்த டிரென்ட் போல்ட் – வைரலாகி வரும் வீடியோ இணைப்பு

0
2266
Trent Boult hitting Six in Last Ball

இந்தியாவில் ஐபிஎல் லீக் தொடர், ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ் லீக் தொடர் நடைபெறுவது போல் நியூசிலாந்தில் சூப்பர் ஸ்மாஷ் என்கிற 20 ஓவர் சூப்பர் லீக் தொடர் 2005 முதல் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் வெலிங்டன் ஃபயர்பேர்ட்ஸ்

ஒடாகோ வோல்ட்ஸ் , நார்தர்ன் கினைட்ஸ், கேன்டர்புரி கிங்ஸ்,ஆக்லாந்து அசெஸ், சென்ட்ரல் டிஸ்ட்ரக்ட்ஸ் என மொத்தமாக 6 அணிகள் பங்கேற்று விளையாடும். இந்தத் தொடரில் இதுவரை ஆக்லாந்து அசெஸ், வெலிங்டன் ஃபயர்பேர்ட்ஸ் இந்த இரண்டு அணிகளும் தலா நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது.

இந்த வருடத்திற்கான சூப்பர் ஸ்மாஷ் தொடர் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தொடரின் லீக் சுற்று போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று கேன்டர்புரி கிங்ஸ் மற்றும் நார்தர்ன் கினைட்ஸ் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற நார்தர்ன் கினைட்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் விளையாடிய கேன்டர்புரி கிங்ஸ் அணி 17.2 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் மட்டுமே குவித்தது.

கடைசி பந்தில் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெறச் செய்த டிரென்ட் போல்ட்

பின்னர் விளையாடிய நார்தர்ன் கினைட்ஸ் அணி ஆரம்பத்தில் சற்று நிதானமாக விளையாடினாலும் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. கடைசி ஓவரில் அந்த அணி வெற்றி பெற 8 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில். முதல் 5 பந்துகளில் 3 விக்கெட்டுகளை இழந்து வெறும் 2 ரன்கள் மட்டுமே அந்த அணி குவித்தது.

பின்னர் கடைசி பந்தில் சிக்சர் அடித்தால் மட்டுமே வெற்றி என்ற நிலையில் அந்த அணியில் இருந்த பொழுது, அந்த அணியின் வீரர் ட்ரெண்ட் போல்ட் சிக்ஸர் அடித்து தனது அணியை வெற்றி பெறச் செய்கிறார். போல்ட் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் நார்தர்ன் கினைட்ஸ் அணி இந்த தொடரின் புள்ளி பட்டியலில் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்த அணியை தொடர்ந்து 12 புள்ளிகளுடன் சென்ட்ரல் டிஸ்ட்ரக்ட்ஸ் அணி இரண்டாவது இடத்திலும், 8 புள்ளிகளுடன் கேன்டர்புரி கிங்ஸ் அணி 3வது இடத்திலும்,6 புள்ளிகளுடன் ஒடாகோ வோல்ட்ஸ் அணி 4-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.