தென்னாபிரிக்க வீரர்கள் செய்த காமெடி ; ரன் அவுட் ஆகாமல் தப்பித்துக் கொண்ட ராகுல் & பண்ட் – வீடியோ இணைப்பு

0
986
KL Rahul and Rishabh Pant Run Out Chance

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இந்த அணிக்கு எதிராக முதலில் நடந்த டெஸ்ட் தொடரை இந்தியா தோல்வி பெற்றுள்ளதால் இந்த ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடி அந்த தோல்விக்கு பழி தீர்க்கும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது. வழக்கமான கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதால் இந்த தொடருக்கு மட்டும் ராகுல் கேப்டனாக இருப்பார் என்று பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன்படி முதல் ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக இருந்தார் ராகுல். ஏற்கனவே 2வது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக விராட் விலகியதால் ராகுல் கேப்டனாக என்பது குறிப்பிடத்தக்கது. முதல் ஒருநாள் போட்டியில் கேப்டனாக செயல்பட்ட ராகுல் ஏகப்பட்ட தவறுகள் செய்தார் என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக ஆறாவது பந்து வீச்சாளரை பயன்படுத்தாமல் இருந்தது மிகவும் விமர்சிக்கப்பட்டது.

தற்போது 2-வது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து பேட்டிங் செய்து வருகிறது. தவான் மற்றும் கோலி என்ற இரண்டு முக்கிய விக்கெட்டுகளை விரைவாகவே இந்தியா இழந்து தற்போதைய தடுமாறி வருகிறது. கோலி அவுட் ஆனதும் பின்பு களத்திற்கு ரிஷப் பண்ட் வந்தார். ஆட்டத்தின் 15வது ஓவரில் கடைசி பந்தில் ரிஷப் பண்ட் பந்தை லெக் சைடில் தட்டிவிட்டு ஒரு ரன் எடுக்க முயற்சித்தார்.

பண்ட் ஓடத்துவங்கியதும் ராகுலும் ஓட ஆரம்பித்துவிட்டார். ஆனால் ஒரு ஃபீல்டர் அப்போது விரைவாக வருவதைப் பார்த்த பண்ட், மீண்டும் பழையபடி தன்னுடைய இடத்திற்கே திரும்பிச் சென்றுவிட்டார். ஆனால் இதை கவனிக்காமல் ராகுலும் பண்ட் முதலில் இருந்த இடத்திற்கே செல்ல இருவரும் ஒரே இடத்தில் இருந்தனர். ஆனால் பீல்டர் எறிந்த பந்தை கேஷவ் மகராஜ் சரியாக பிடிக்காத காரணத்தினால் ராகுல் தன்னுடைய இடத்திற்கு மீண்டும் ஓடி வந்து ரன் அவுட் ஆகாமல் தப்பித்து விட்டார். தற்போது வரை இந்தியா 2 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.