உள்ளூர் இறுதி ஆட்டத்தில் பேயாட்டம் ஆடி இரட்டைச் சதம் விளாசிய சூர்யகுமார் யாதவ் – ஸ்கோர் விவரம் மற்றும் வீடியோ இணைப்பு

0
2551
FinalSuryakamar Yadav 249 in Final

போலீஸ் இன்விடேஷன் ஷீல்டு கிரிக்கெட் தொடர் 2005 முதல் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் மொத்தம் நான்கு குரூப்கள் பிரிக்கப்படும். அதில் ஒவ்வொரு குரூப்பிலும் 4 அணிகள் இடம் பெற்று இந்த தொடரில் விளையாடும்.2021 – 2022ஆம் ஆண்டிற்கான இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப் போட்டியில் பையாடே ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் பார்சி ஜிம்கானா அணியும் மோதி வருகின்றன.

இறுதிப் போட்டியின் முதல் நாளான இன்று டாஸ் வென்ற பையாடே ஸ்போர்ட்ஸ் கிளப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.இன்று முதல் நாள் முழுவதும் விளையாடிய பார்சி ஜிம்கானா அணி 90 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 524 ரன்கள் குவித்துள்ளது.

- Advertisement -

பட்டையை கிளப்பிய சூர்யகுமார் யாதவ்

அந்த அணியில் மற்ற பேட்ஸ்மேன்கள் சற்று நிதானமாக விளையாட ஒரு பக்கம் சூர்யகுமார் யாதவ் பேயாட்டம் 152 பந்துகளில் 37 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் என மொத்தமாக 249 ரன்கள் குவித்து எதிரணியை கதிகலங்க வைத்துள்ளார். இன்றைய போட்டியில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 163.32 என்பது கவனிக்கத்தக்க விஷயம்.

அணியின் ஒட்டுமொத்த ரன்களில் கிட்டத்தட்ட பாதி ரன்கள் இன்று அவர் மட்டுமே அடித்துள்ளார். சுரேஷ் குமார் யாதவுக்கு அடுத்தபடியாக அந்த அணியில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆதித்ய தாரே 123 பந்துகளில் 73 ரன்களும், சச்சின் யாதவும் 70 பந்துகளில் 63 ரன்களும் குவித்தனர். அணியின் கேப்டன் விக்ராந்த் 73 ரன்கள் 52 ரன்கள் குவித்ததும் குறிப்பிடத்தக்கது.

கடினமான சவாலுடன் களம் இறங்கப் போகும் பையாடே ஸ்போர்ட்ஸ் கிளப் அணி

இமாலய இலக்கை நோக்கி பேட்டிங் செய்ய போகும் பையாடே ஸ்போர்ட்ஸ் கிளப் அணி நிதானமாக விளையாடினால் மட்டுமே இந்த போட்டியில் வெற்றி அடைய முடியும். எதிரணியில் இளம் வீரர் யாஷாஹ்வி ஜெய்ஸ்வால் ஓபனிங் பேட்ஸ்மேனாக நல்ல துவக்கத்தை கொடுத்தால், பையாடே அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம் அந்த அணியில் சிதேஸ் லேட் மற்றும் பூபன் லால்வாணி போன்ற நம்பிக்கையான பேட்ஸ்மேன்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -