அவர் என்னை நெருங்கி வரும்போது நான் பயந்துவிட்டேன் ; விராட் கோலியுடனான மோதலில் பின்னணி உண்மையை விவரிக்கும் சூர்யகுமார் யாதவ் – வீடியோ இணைப்பு

0
4046
Suryakumar Yadav and Virat Kohli

இந்த ஆண்டு மெகா ஏலம் நடைபெறுவதற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணி இவரை தக்க வைத்துக் கொண்டது. மும்பை அணி நிர்வாகம் சூர்யகுமார் யாதவ் மீது வைத்த நம்பிக்கையை தற்பொழுது வரை காப்பாற்றி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் மிக அற்புதமாக விளையாடி வருகிறார். நான்கு போட்டிகளில் விளையாடி 200 ரன்கள் குவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 66.67 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சூர்யகுமார் யாதவ் சமீபத்தில் ஒரு நேர்காணலில் 2020 ஆம் ஆண்டு பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு போட்டியில் நடந்த நிகழ்வை நினைவு கூர்ந்துள்ளார். அந்த வருடம் மும்பை மற்றும் பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 43 பந்துகளில் 79 ரன்கள் குவித்து மும்பை அணியை ஒற்றை ஆளாக நின்று சூர்யகுமார் யாதவ் வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

அப்போட்டியில் டேல் ஸ்டெயின் வீசிய ஓவரில் சூர்யகுமார் யாதவ் அவர் அவர் பந்தை அதிரடியாக அடிக்க விராட் கோலி திடீரென சூர்யகுமார் யாதவை ஸ்லெட்ஜ் செய்தார். அந்த நிகழ்வை யாராலும் மறந்துவிட முடியாது. அந்த நிகழ்வைப் பற்றி தான் தற்பொழுது சூர்யகுமார் யாதவ் நினைவு கூர்ந்துள்ளார்

உண்மையில் நான் அப்போது பயந்துவிட்டேன்

போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கையில் திடீரென அந்த நேரத்தில் விராட் கோலி என்னை நோக்கி நெருங்கி வந்தார். வெளியில் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் நான் எனக்குள் பயந்து விட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். நாங்கள் இருவரும் பபுள்கம் மென்று கொண்டிருந்தோம். அவர் என்னை ஸ்லெட்ஜ் செய்தார்.

அப்பொழுது எனக்குள் ஒரே ஒரு விஷயம் தான் நினைவுக்கு வந்தது. இந்த நிகழ்வு இன்னும் ஒரு பத்து நொடிகளில் கடந்து விடும். அவர் என்ன வார்த்தை கூறினாலும் எக்காரணத்தைக் கொண்டும் பதிலுக்கு எந்த வார்த்தையும் கூறிவிட வேண்டாம். நல்லவேளை அப்பொழுது என்னுடைய பேட் கீழே விழுந்தது. நான் அவரை அவ்வளவாக கண்காணிக்கவில்லை. அந்த போட்டி முடியும் வரையில் நான் அதன் பின்னர் அவரை பார்க்க வில்லை.

- Advertisement -

என்னுடைய நோக்கம் முழுவதும் அப்போட்டியில் என்னுடைய அணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என்பதிலேயே இருந்தது. அப்போட்டி நடந்து முடிந்த பின்னர் தற்பொழுது வரை நாங்கள் இருவரும் அங்கு நிகழ்வு குறித்து வெளியில் இதுவரையில் பேசிய இல்லை என்றும் சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி, ஆறு போட்டியிலும் தோல்வி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மறுபக்கம் பெங்களூர் அணி 6 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியில் 3வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.