தோனியை நான் விளையாட சொல்லி வலியுறுத்துவேன் – உணர்ச்சிப் பொங்க பேசிய சுரேஷ் ரெய்னாவின் வீடியோ இணைப்பு

0
3140
MS Dhoni and Suresh Raina

சென்னை சூப்பர் கிங்ஸ் முதன்முதலாக 2010ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை கைப்பற்றியது. அந்த ஆண்டு சென்னை அணிக்காக 16 போட்டிகளில் 4 அரைசதங்கள் உடன் 520 ரன்கள் சுரேஷ் ரெய்னா குவித்தார். அதேபோல 2011ம் ஆண்டு 16 போட்டிகளில் 4 அரைசதங்கள் உடன் 438 ரன்கள் குவித்தார். அந்த ஆண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. 2018 மூன்றாவது கோப்பையை சிஎஸ்கே கைப்பற்றிய வருடமும் சுரேஷ் ரெய்னா 15 போட்டிகளில் நான்கு அரைச் சதங்களுடன் 445 ரன்கள் குவித்தார்.

அதேபோல 2008 முதல் 2019ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் 300 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீரர் என்ற பெருமையையும் தனது பெயருக்குப் பின்னால் வைத்திருக்கிறார். இதன் காரணமாகவே மிஸ்டர் ஐபிஎல் என்று செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா கடந்த ஆண்டு அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை.

- Advertisement -

கடந்த ஆண்டில் சென்னை அணி கோப்பையை கைப்பற்றி இருந்தாலும் இவர் 12 போட்டிகளில் ஒரே ஒரு அரை சதத்துடன் மொத்தமாகவே 160 ரன்கள் மட்டுமே குவித்தார். அது தவிர எந்தவித டொமஸ்டிக் போட்டிகளிலும் இவர் பங்கேற்காத காரணத்தினால், சென்னை அணி இவரை தக்க வைக்கவில்லை.

தக்க வைத்துக் கொள்ளவில்லை என்றாலும் நிச்சயமாக மெகா ஏலத்தில் இவரை சென்னை நிர்வாகம் கைப்பற்றிவிடும் என்று அனைவரும் நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் குறைந்த பட்ச விலையான 2 கோடி ரூபாய்க்கு கூட சுரேஷ் ரெய்னாவை சென்னை நிர்வாகம் வாங்க முயற்சிக்கவில்லை. சென்னை அணி வாங்கவில்லை என்றாலும் மற்ற அணிகளாவது இவரை வாங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் மற்ற அணிகளும் இவரை வாங்க தயங்கின.

உணர்வுபூர்வமாக பேசிய சுரேஷ் ரெய்னாவின் வீடியோ

மகேந்திர சிங் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா இவர்கள் இருவரும் இல்லாத சென்னை அணியை ரசிகர்கள் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது. சென்னை அணியில் இரு கண்கள் ஆகவே இவர்கள் இருவரும் இருந்து வந்தனர். 2019ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிக்கை வெளியிட்டார்.

- Advertisement -

அவர் அறிக்கை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே சுரேஷ் ரெய்னாவும் தான் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக கூறி இருந்தார். இவர்கள் இருவரின் நட்பு எந்த அளவுக்கு இருக்கின்றது என்பது இந்த ஒரு விஷயத்தில் இருந்தே நாம் அனைவரும் தெரிந்து கொள்ளலாம்.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முன்பாக சுரேஷ் ரெய்னா பிரத்தியேகமாக ஒரு பேட்டி அளித்திருந்தார். அந்தப் பேட்டியில் “இந்த ஆண்டுடன் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்று விட்டால் நானும் அவரும் அவருடன் இணைந்து ஓய்வு பெறுவேன். ஒருவேளை சென்னை அணி இந்த ஆண்டு (2021) கோப்பையை கைப்பற்றினால் அடுத்த ஆண்டும் மகேந்திர சிங் தோனி விளையாட நான் வலியுறுத்துவேன்” என்று உணர்ச்சி பூர்வமாக பேசியிருந்தார்.

சென்னை அணி மற்றும் மகேந்திர சிங் தோனி மீது அலாதி அன்பு வைத்திருந்த சுரேஷ் ரெய்னாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முதல் முறையாக தவிர்த்தது அந்த அணி ரசிகர்களுக்கு மிகப்பெரிய வலியை கொடுத்துள்ளது. முதல் முறையாக சுரேஷ் ரெய்னா இல்லாத ஐபிஎல் தொடரையையும், சுரேஷ் ரெய்னா இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும் நாம் அனைவரும் பார்க்க போகிறோம் என்று கூறும் பொழுதே நம் மனது கனக்கிறது.