உம்ரான் மாலிக் யார்க்கரில் க்ளீன் பவுல்ட் ஆன ஷ்ரேயாஸ் ஐயர் ; சந்தோசத்தில் துள்ளிக் குதித்த டேல் ஸ்டெய்ன் – வீடியோ இணைப்பு

0
354
Dale Steyn reaction for Shreyas Iyer Wicket

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் 25-வது போட்டி, கேன் வில்லியம்சனின் ஹைதராபாத் அணியும், ஸ்ரேயாஷின் கொல்கத்தா அணியும், மும்பை ப்ரோபோர்ன் மைதானத்தில், தற்போது பலப்பரீட்சை நடத்தி வருகின்றன!

மைதானத்தில் பந்து ஸ்விங் ஆவதோடு, பந்து சீறியும் வருவதால், ப்ரோபோர்ன் மைதானத்தில் நிச்சயம் பந்துவீச்சில் பனிப்பொழிவு பாதகங்களை உருவாக்கும் என்பதால், டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பீல்டிங்கை தேர்வுசெய்தார்.

கொல்கத்தாவிற்காக ரகானேவிற்கு பதிலாக வெங்கடேசோடு வந்த ஆரன் பின்ஞ் உடனே வெளியேற, ஒரே ஓவரில் வெங்கடேஷ், நரைனை நடராஜன் வெளியேற்றினார். ஆனால் கேப்டன் ஸ்ரேயாசும் நிதிஷ் ராணாவும் கணிசமாக ரன்களை உயர்த்த ஆரம்பித்தார்கள்.

இந்த நிலையில்தான் ஆட்டத்தின் பத்தாவது ஓவரை வீசவந்த இந்தியாவின் அதிவேக பவுலர் உம்ரான் மாலிக் பேட்ஸ்மேன்களுக்கு தன் வேகத்தால் ஆட்டம். அந்த ஓவரின் கடைசி பந்தை அவர் ஷார்ட் பந்தாக வீசுவாரென்று, கிரிஸீல் இடவலமாக நகர்ந்து ஸ்ரேயாஷ் போக்கு காட்டினார்.

ஆனால் உம்ரான் மாலிக் அதிவேகமாக மணிக்கு 150 கி.மீ வேகத்தில் யார்க்கராக வீசி, ஸ்ரேயாஷை ஆச்சரியப்படுத்தோடு, க்ளீன் போல்டும் செய்துவிட்டார். இதை பெவிலியனிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த, உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளரும், ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயற்சியாளருமான டேல் ஸ்டெயின், அருகில் இருந்தவர்களை தட்டி மகிழ்ந்து, தான் உம்ரான் மாலிக் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்!