தென் ஆப்பிரிக்க அணிக்கு கிடைத்துள்ள இளம் டிவில்லியர்ஸ் ; அச்சு அசல் ஏபிடி போல பேட்டிங் செய்யும் வீடியோ இணைப்பு

0
2515

ஐசிசி அண்டர் 19 உலக கோப்பை தொடர் நேற்றைய முன் தினம் ஜனவரி 14-ஆம் தேதி தொடங்கியது. 16 அணிகள் ஏ பி சி மற்றும் டி என குரூப்களாக பிரிக்கப்பட்டு இந்த தொடர் நடைபெற்று வருகிறது. குரூப் பி பிரிவில் இந்தியா அயர்லாந்து உருகுவே மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இடம்பெற்றுள்ளன.

குரூப் பி பிரிவில் இந்திய மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் நேற்று மோதின. போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் விளையாடிய இந்திய அணி நாற்பத்தி ஏழு ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் யாஷ் துல் 82 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 46 வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென்ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக தேவால்ட் பிரேவிஸ் 65 ரன்கள் குவித்தார். போட்டியின் முடிவில் 45 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று குரூப் பி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

தென்ஆப்பிரிக்க அணியில் பட்டையை கிளப்பிய பேபி டிவில்லியர்ஸ்

தென்னாபிரிக்க அணி என்று சொன்னாலே அனைவருக்கும் நினைவில் வந்து போகும் ஒரு பெயர் ஏபி டிவில்லியர்ஸ் தான். மைதானத்தில் அவர் நின்றாலே சரவெடி வெடிக்கும் என்கிற அளவில் நாலாபக்கமும் பந்தை தூக்கி அடிப்பதில் அவர் திறமை வாய்ந்தவர்.

மிஸ்டர் 360 டிகிரி என்று செல்லமாக அழைக்கப்படும் அவரைப் போன்று விளையாடும் ஆற்றல் யாருக்கும் இல்லை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், அவரை போலவே தற்பொழுது 18 வயதான தென் ஆப்பிரிக்க இளம் வீரரான தேவால்ட் பிரேவிஸ் விளையாடி வருகிறார்.

- Advertisement -

நேற்று நடந்த போட்டியில் மற்ற தென் ஆப்பிரிக்க வீரர்கள் அவ்வளவு சிறப்பாக விளையாட பட்சத்தில் மறுபக்கம் தனியாளாக நின்று மிக நிதானமாக பிரேவிஸ் விளையாடிய விதம் அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக அவரது பிளேயிங் ஸ்டைல் மற்றும் ஷாட்கள் ஏபி டிவில்லியர்ஸ் போன்று இருந்தது. தன்னுடைய அரை சதத்தை ஒரு சிக்சர் மூலமாக நிகழ்த்தினார்.

ஏபி டிவிலியர்ஸ் எவ்வாறு இறங்கி வந்து சிக்ஸர் அடிப்பாரோ அதேபோல இவர் நேற்று அடித்த சிக்ஸர் பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருந்தது. மைதானத்தில் இருந்த அவரது சக வீரர்கள் கூட பேபி டிவில்லியர்ஸ் என்று எழுதப்பட்ட ஒரு போர்டை காண்பித்து அவரை உற்சாகப்படுத்தினார்.

ஏபி டிவில்லியர்ஸ் போலவே இறங்கி வந்து அவர் அடித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.