“விராட் கோலியோட நம்பர் 3ல இனிமே சூரியா தான் இறங்கனும்னு சொன்ன கம்பீர்” சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த சூரியகுமார் யாதவ் – முழு வீடியோ இதோ!

0
121

விராட் கோலியின் இடத்தில் இனிமேல் சூரியகுமார் யாதவ் தான் இறங்க வேண்டும் என்று கருத்து தெரிவித்த கௌதம் கம்பீரிடம் நேரடியாக வந்து சர்ப்ரைஸ் கொடுத்தார் சூரியகுமார் யாதவ்.

ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஹாங்காங் மோதிய போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் ரோகித் சர்மா 13 பந்துகளுக்கு 21 ரன்கள் அடித்து நல்ல துவக்கம் அமைத்துக் கொடுத்தார். கே எல் ராகுல் மற்றும் விராட் கோலி ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 49 பந்துகளில் 56 ரன்கள் அடித்தது. கேஎல் ராகுல் 36 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

நான்காவது வீரராக களமிறங்கிய சூரியகுமார் யாதவ், வந்த முதல் பந்தில் இருந்தே வெளுத்து வாங்கினார். வெறும் 22 பந்துகளுக்கு அரைசதம் கடந்த இவர், இன்னிங்ஸ் இறுதியில் ஆட்டம் இழக்காமல் 26 பந்துகளுக்கு 68 ரன்கள் அடித்திருந்தார். இதில் ஆறு பவுண்டரிகள் ஆறு சிக்ஸர்கள் அடங்கும். இந்திய அணியில் விராட் கோலி இல்லாதபோது மூன்றாவது இடத்தில் சூரியக்குமார் யாதவ் களமிறங்கி வந்தார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் கூட சூரியகுமார் யாதவ் சில போட்டிகளில் துவக்க வீரராகவும், சில போட்டிகளில் மூன்றாவது வீரராகவும் களமிறங்கினார்.

சமீபகாலமாக விராட் கோலியின் பேட்டிங் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அவரது இடத்தை நிரப்புவதற்கு இந்திய அணி நிர்வாகமும் தொடர்ந்து திட்டமிட்டு வருவதாகவும் தெரிகிறது. டி20 உலக கோப்பை மற்றும் ஒரு நாள் போட்டிக்கான உலகக்கோப்பை என அடுத்தடுத்து மிகப்பெரிய தொடர்கள் வரவிருப்பதால் இந்திய அணிக்கு மிகப்பெரிய சிக்கலாக இது இருக்கிறது.

இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் ஹாங்காங்க்கு அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு சூரியகுமார் பற்றி கருத்து தெரிவித்த கௌதம் கம்பீர் கூறுகையில், “தற்போது மூன்றாவது இடத்திற்கு விராட் கோலியை விட சூரியகுமார் யாதவ் சரியான வீரராக இருப்பார்.” என்றார். அருகில் நின்று கொண்டிருந்த தொகுப்பாளர், “சூரியகுமார் யாதவ் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இல்லாமல், வெவ்வேறு இடங்களில் இறங்குவது தான் சரியாக இருக்கும். அணியின் தேவை பொறுத்து அவர் களமிறங்க வேண்டும்.” என்றார்.

- Advertisement -

உடனடியாக இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த இடத்தை நோக்கி வந்த சூரியகுமார் யாதவ் கௌதம் கம்பீரிடம் சிரித்தபடியே இருந்தார். அப்போது மீண்டும் ஒருமுறை கௌதம் கம்பீர், இவர் மூன்றாவது இடத்தில் தான் களமிறங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக கௌதம் கம்பீர் இருந்தபோது, அந்த அணியில் சூரியகுமார் யாதவ் விளையாடினார். அப்போது இருந்து இவரது பேட்டிங்கை கவனித்து, கௌதம் கம்பீர் கடந்த சில ஆண்டுகளாக சூரியகுமார் பேட்டிங் குறித்து பல கருத்துக்களையும் அணியின் தேர்வு குழுவினருக்கு முன் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.