அடுத்த போட்டிக்கு கோலி வந்து விடுவார் ; தென் ஆப்பிரிக்க வீரருக்கு வார்னிங் கொடுத்த சிராஜ் – வீடியோ இணைப்பு

0
1540
Siraj Elgar Conversation

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. தற்போது நடந்து முடிந்துள்ள இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரில் வெற்றி பெற்றால் முதல் முறையாக தென் ஆப்பிரிக்க நாட்டில் டெஸ்ட் தொடரை கைப்பற்றலாம் என்ற முனைப்புடன் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த தொடரின் 3வது டெஸ்ட் போட்டி தென் ஆப்பிரிக்க நாட்டில் உள்ள கேப் டவுன் மைதானத்தில் நடக்கவுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு 240 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணியின் பந்துவீச்சை கருத்தில் கொண்டு எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்று ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால் அந்த அணியின் கேப்டன் எல்கர் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றி கனவை தகர்த்தார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் 96 ரன்கள் எடுத்து இந்த தொடரை சமன் செய்ய உதவினார் அவர். மிகவும் பொறுமையாக இந்த இன்னிங்ஸில் பேட்டிங் ஆடிய அவர் 188 பந்துகளை சந்தித்து 96 ரன்கள் எடுத்தார்.

ஒரு கட்டத்தில் இவரது பேட்டிங்கால் விரக்தி அடைந்தனர் இந்திய பந்துவீச்சாளர்கள். குறிப்பாக ஆட்டத்தின் 65வது ஓவரை வீசிய சிராஜ் பந்துவீச்சில் எல்கர் அழகாக ஒரு பவுண்டரி அடித்ததும் சிராஜ் அவரை நோக்கி ஏதோ கூற இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. வழக்கம்போல நடுவர் தலையிட்டு சமரசம் செய்து வைத்தார். இந்திய அணியின் கேப்டன் கே எல் ராகுலும் இடையில் வந்து சமாதானம் செய்தார். தற்போது சிராஜ் என்ன பேசினார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தென் ஆப்பிரிக்க அணி வெற்றியின் விளிம்பில் இருந்த போது அடுத்த டெஸ்ட் போட்டிக்கு விராட் வந்துவிடுவார் தெரியும் அல்லவா என்று சிராஜ் எல்கரை நோக்கி கூறியுள்ளார். விராட் கோலி களத்தில் இருந்த அதே அணிக்கு புதுவகையான ஆக்ரோஷமும் உத்வேகமும் வரும் என்பதால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விராத் கோலியின் வருகையை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

கே.எல்.ராகுல் மற்றும் அணி நிர்வாகமும் விராட் கோஹ்லி அடுத்த போட்டிக்குத் திரும்புவார் என்று நம்பிக்கை அளித்துள்ளது. வெற்றியே பெறாத கேப்டவுன் மைதானத்தில் வெற்றி கண்டு முதல் முறையாக தென்னாபிரிக்கா மண்ணில் இந்திய அணி கோப்பையை உயர்த்தும் என்று அனைத்து ரசிகர்களும நம்புகின்றனர்.