லக்னோ அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் விட்டுக் கொடுத்த ஷிவம் மாவி – வீடியோ இணைப்பு

0
725
Shivam Mavi 30 runs over

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் 53வது போட்டியில், கே.எல்.ராகுலின் லக்னோ அணியும், ஸ்ரேயாஷின் கொல்கத்தா அணியும், மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் புனே மைதானத்தில் தற்போது பலப்பரீட்சை நடத்தி வருகின்றன!

லக்னோ அணி விளையாடிய பத்து ஆட்டங்களில், ஏழு ஆட்டங்களில் வென்று, பதினான்கு புள்ளிகளோடு, புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. கொல்கத்தா அணி விளையாடிய பத்து ஆட்டங்களில், நான்கு ஆட்டங்களில் வென்று, எட்டுப் புள்ளிகளோடு புள்ளி பட்டியலில் எட்டாம் இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியில் உமேஷ் யாதல் காயத்தால் விளையாடாததால் ஹர்சித் ராணா இடம் பெற்றார். லக்னோ அணியில் காயத்தால் கடந்த ஆட்டங்களில் விளையாடாத ஆவேஷ் கான் களமிறக்கப்பட்டிருக்கிறார்.

முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஷ் பந்துவீச்சை தேர்வு செய்ய, லக்னோ அணியின் பேட்டிங்கை துவங்க வந்த கே.எல்.ராகுலை ஒரு பந்து கூட சந்திக்க விடாமல், ரன்அவுட் செய்து அனுப்பி வைத்தார், சக துவக்க ஆட்டக்காரர் குயின்டன் டிகாக். ஆனால் இதற்குப் பரிகாரம் செய்யும் விதமாக, அடுத்து வந்த தீபக் ஹூடாவுடன் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதமடித்து ஆட்டமிழந்தார்.

இந்த இருவரின் ஆட்டத்தை பார்த்த பொழுது லக்னோ அணி 200 ரன்களை எளிதாய் எட்டும்போல் தெரிந்தது. ஆனால் இருவரும் ஆட்டமிழந்ததும் 160 ரன்களை எட்டுவதே கடினம் என்ற நிலைக்கு லக்னோ அணி சரிந்துவிட்டது. இந்த சமயத்தில் 19வது ஓவரை சிவம் மாவி வீச, அந்த ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் மீதமிருந்த இரண்டு பந்துகளையும் சிக்ஸராய் பறக்க விட்டார் ஜேசன் ஹோல்டர். அந்த ஓவரில் மட்டுமே ஐந்து சிக்ஸர்கள் மூலம் 30 ரன்கள் லக்னோ அணிக்கு வந்தது. இதன் மூலம் லக்னோ அணி இருபது ஓவர்கள் முடிவில் 176 ரன்களை எட்டியது!

- Advertisement -