இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த பந்தை அவர் வீசியிருக்கிறார், தொடர் பாராட்டு மழையில் இந்திய மகளிர் அணி வீரர் ஷிகா பாண்டே

0
180
Shikha Pandey

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதிய வரும் மூன்று போட்டிகளை கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் பரபரப்பை எட்டி இருக்கிறது. முதல் போட்டி மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்ட நிலையில், இன்று நடந்து முடிந்த முடிந்த 2ஆவது போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்திருந்த போதிலும், அந்தத் தோல்வியை மறக்க வைக்கும் விதத்தில் ஷிகா பாண்டேவின் பந்துவீச்சு இன்று அமைந்திருக்கிறது.

நம்ப முடியாத ஒரு பந்தை வீசி ஆச்சரியப்படுத்திய ஷிகா பாண்டே

இந்திய மகளிர் அணி முதல் இன்னிங்சில் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய மகளிர் அணியின் டாப் ஆர்டர் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இன்று விளையாடவில்லை. மந்தனா, ஷபாலி மற்றும் ஜெம்மையா என மூவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

பின்னர் ஹர்மன்பிரீட் நிதானமாக விளையாடி 28 ரன்கள் குவித்தார். கடைசி நேரத்தில் பூஜை 26 பந்துகளில் 37 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதி நேரத்தில் அவர் அடித்த காரணமாகவே, இந்திய அணி 100 ரன்களை கடந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் வந்து களமிறங்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் ஓபனிங் வீரர் அலிஸா ஹீலி ஷிகா பாண்டே வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டினார். சுதாரித்துக்கொண்ட ஷிகா பாண்டே அதற்கு அடுத்த பந்தை இன் ஸ்விங்காக வீசினார். கிட்டத்தட்ட ஐந்தாவது ஸ்டெம்ப் லைனில் வீசப்பட்ட அந்த பந்து, திடீரென உள்ளே புகுந்து ஸ்டெம்பை பதம் பார்த்தது.

திடீரென பந்து உள்ளே நுழைந்து ஸ்டெம்பை பதம் பார்க்கும் என்று யாரும் நினைக்கவில்லை. பார்ப்பதற்கு ஏதோ ஒரு மாயாஜாலம் நிகழ்ந்தது போல் இருந்தது. ட்விட்டர் வலைதளத்தில் ஆஸ்திரேலிய மகளிரணி நிர்வாகம் கூட எங்களால் இதை நம்ப முடியவில்லை என்று ஷிகா பாண்டேவை வெகுவாக பாராட்டி பதிவிட்டது. அதேபோல இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர், ” மகளிர் கிரிக்கெட்டில் இந்த நூற்றாண்டில் நான் பார்த்த மிகச் சிறந்த பந்து இது” என்று பாராட்டினார்.

- Advertisement -

முன்னிலையில் இருக்கும் ஆஸ்திரேலிய மகளிர் அணி

ஹீலியின் விக்கெட்டை ஷிகா பாண்டே வீழ்த்திய போதிலும், பின்னர் வந்து விளையாடிய மூனி மற்றும் லேன்னிங் முக்கியமான பார்ட்னர்ஷிப்பை அமைத்து ஆஸ்திரேலிய அணிக்கு சிறந்த துவக்கத்தை ஏற்படுத்த கொடுத்தனர். ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 14-வது ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு, 71 ரன்களுடன் ஆஸ்திரேலிய அணி தடுமாறியது.

ஆஸ்திரேலிய அணி தோற்று விடும் என்று அனைவரும் எண்ணிய நிலையில்,டகிலா மெக்ராத் 33 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 48 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் ஆஸ்திரேலிய மகளிர் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்த வெற்றியின் மூலம் நடப்பு டி20 தொடரில், 1-0 என்கிற நிலையில் ஆஸ்திரேலிய மகளிர் அணி முன்னிலையில் உள்ளது.