கோபத்தில் தன் நிலை மறந்து ஆவேசப்பட்ட ரிஷப் பண்ட்டை சமாதானப்படுத்திய ஷேன் வாட்சன் – வீடியோ இணைப்பு

0
459
Shane Watson and Rishabh Pant

டெல்லி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலாக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 65 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 9 சிக்சர் உட்பட 116 ரன்கள் குவித்தார்.

பின்னர் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் மட்டுமே குவித்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக கேப்டன் பிஷாப் அண்ட் 24 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சர் உட்பட 44 ரன்கள் குவித்தார். ராஜஸ்தான் அணியில் மிக சிறப்பாக பந்து வீசிய பிரசித் கிருஷ்ணா 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகன் விருது அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லருக்கு வழங்கப்பட்டது.

- Advertisement -
போட்டியின் இறுதி நேரத்தில் நடந்த வாக்குவாதம்

நேற்று போட்டியில் கடைசி ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற 36 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை ஒபெட் மெக்காய் வீசினார். அவர் வீசிய பந்தை ரோவ்மன் போவெல் எதிர்கொண்டார். முதல் மூன்று பந்துகளையும் வந்த வேகத்தில் பவுண்டரிக்கு மேலே (சிக்சர்) போவெல் வெளியே பறக்கவிட்டார்.

அதில் மூன்றாவது பந்து ஃபுல் டாஸாக மெக்காய் வீசினார். அவர் வீசிய பந்தை மறுஆய்வு செய்து பார்க்கையில் போவெலின் இடுப்பு பகுதிக்கு மேல் இருந்தது தெரியவந்தது. இடுப்பு பகுதிக்கு மேல் வீசப்படும் பந்து நோபால் என்று அறிவிக்கப்பட வேண்டும்.

ஆனால் சற்று இறங்கி வந்து விளையாடிய காரணத்தினால் அந்த பந்து
ஃபுல் டாஸாக எடுத்துக் கொள்ளப்பட்டது என்று கூறி நடுவர்கள் நோபால் கொடுக்க மறுத்துவிட்டனர். இதை பார்த்துக்கொண்டிருந்த டெல்லி அணியின் கேப்டன் பண்ட் கோபமடைந்து வீரர்களை மைதானத்திலிருந்து வெளியேறுமாறு அழைத்தார். இதனால் டெல்லி அணியின் டக் அவுட்டில் பரபரப்புத் தொற்றிக் கொண்டது.

- Advertisement -

இதை பார்த்துக்கொண்டு இருந்த டெல்லி அணியின் துணை பயிற்சியாளர் ஷேன் வாட்சன் பின்னர் ரிஷப் பண்ட் இடம் சென்று சற்று பேசி அவரை சமாதானப்படுத்தி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். ஷேன் வாட்சன் அவ்வாறு ரிஷப் பண்ட்டை சமாதானப்படுத்திய வீடியோ தற்போது சமூக வலைகளில் வைரலாகி வருகிறது.

நேற்றைய ஆட்டத்தில் மூன்றாவது பந்து நோ பாலாக அறிவிக்கப்பட்டு இருந்திருந்தால், நிச்சயமாக டெல்லி அணி வெற்றி பெற ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று தான் சொல்ல வேண்டும். நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தற்போது 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த டெல்லி அணி 6 புள்ளிகளுடன் தற்போது புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.