எம்.எஸ் தோனியை கண்ட சந்தோஷத்தில் துள்ளிக் குதித்த பாகிஸ்தான் வீரர் ஷாநவாஸ் தாஹானி

0
139
MS Dhoni and Shahnawaz Dahani

உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டி இன்று முதல் நடைபெற தொடங்கியுள்ளது. குரூப் ஏ அணியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், ஸ்ரீலங்கா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் டி அணியில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஸ்காட்லாந்து மற்றும் நமீபியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இன்று முதல் லீக் சுற்று போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. நாளை அனைவரும் எதிர்பார்க்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது. அந்தப் போட்டியை எதிர்நோக்கி இந்திய பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மிக ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

மைதானத்தில் எம்எஸ் தோனி பார்த்ததும் துள்ளிக் குதித்த ஷாநவாஸ் தாஹானி

நாளை துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கும் போட்டிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி வீரர்கள் தற்போது தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மைதானத்திற்கு இந்திய அணியின் ஆலோசகராக இந்திய அணி வீரர்களை வழி நடத்தி வரும் மகேந்திர சிங் தோனி நடந்து வந்தார். அவர் வருவதை கண்ட பாகிஸ்தான் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஷாநவாஸ் தாஹானி உற்சாகம் அடைந்தார்.

மகேந்திர சிங் தோனிக்கு எப்பொழுதும் அனைத்து ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் வீரர்கள் இடமும் நல்ல வரவேற்பு இருக்கும். இன்றும் அதே போல ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. எம்எஸ் தோனியை கண்ட ஷாநவாஸ் தாஹானி உற்சாகத்துடன் துள்ளிக் குதித்தார். பின்னர் இருவரும் நிறைய விஷயங்களை பரிமாறிக் கொண்டனர்.

உரையாடலில் மகேந்திர சிங் தோனி தனக்கு வயதாகி கொண்டே போகிறது என்று கூறியுள்ளார். பதிலுக்கு ஷாநவாஸ் தாஹானி நீங்கள் இன்னும் அதே உடற்கட்டுடன் நல்ல உடல் தகுதியுடன் சிறப்பாக இருக்கிறீர்கள் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

வரலாற்றை மாற்றியமைக்குமா பாகிஸ்தான் அணி

உலக கோப்பை டி20 தொடர் வரலாற்றைப் பொறுத்தவரையில் ஐந்து முறை இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. அதில் ஐந்து முறையும் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி கொண்டுள்ளது. தற்பொழுது உள்ள பாகிஸ்தான் அணி மற்றும் இந்திய அணி ஏறக்குறைய இரண்டும் சம பலத்துடன் இருப்பதால், நாளை நடைபெற இருக்கின்ற போட்டி மிகவும் சுவாரசியமாக இருக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக விராட் கோலி மற்றும் பாபர் அசாம் இருவருக்கும் இடையிலான போட்டி காரசாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை நடக்க இருக்கின்ற போட்டியில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தி புதிய வரலாற்றைப் படைக்குமா என்று பாகிஸ்தான் அணி வீரர்கள் ஒரு பக்கம் இருக்க, ஆறாவது முறையாக பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தி தன் கர்ஜனையை தொடருமா என்று இந்திய அணி வீரர்கள் ஒரு பக்கம் ஆவலுடன் இருக்கின்றனர்.

இந்த இரு அணிகளுக்கும் இடையே நடைபெற இருக்கும் ஆட்டம் நாளை இந்திய மணி அளவில் 7.30 மணிக்கு தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.