வீடியோ: படுமோசமாக ரன் அவுட்டான சஞ்சு சாம்சன்.. “ஏம்பா அதான் அரைசதம் அடிச்சி நல்லாதான ஆடிட்டு இருந்த” என மோசமாக திட்டிய ரசிகர்கள்!!! இந்த வீடியோ பாருங்க..

0
100

அரைசதம் அடித்திருந்த சஞ்சு சாம்சன் கவனக்குறைவால் மோசமாக ரன் அவுட்டான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகிய வைரல் ஆகியுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், 312 ரன்கள் என்ற சற்று கடினமான இலக்கை துரத்திய இந்திய அணிக்கு மந்தமான துவக்கமே அமைந்தது. முதல் போட்டியில் அபாரமாக விளையாடி சதம் வாய்ப்பை நழுவவிட்ட கேப்டன் தவான், இப்போட்டியில் நல்ல துவக்கம் கொடுப்பார் என எதிர்பார்த்தபோது,  வெறும் 13 நாட்களுக்கு துரதிஷ்டவசமாக ஆட்டம் இழந்தார். மற்றுமொரு துவக்க வீரர் கில் 43 ரன்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேறினார். 

- Advertisement -

மறுமுனையில் இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் நிதானமாக விளையாடி வந்தபோது அடுத்ததாக வந்த சூரியகுமார் யாதவ் 9 ரன்கள் மட்டுமே அடித்து அவுட்டாக, இந்திய அணி திணறி வந்தது. நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டு ரன் குவிப்பில் இறங்கினர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்தது. ஷ்ரேயாஸ் அரை சதம் கடந்த பிறகு 63 ரன்களில் ஆட்டம் இழந்தார். 

சிறப்பாக ஆடிவந்த சஞ்சு சாம்சன் முக்கியமான கட்டத்தில் தனது கவனக்குறைவால் ஆட்டம் இழந்தார். ரன் எடுக்க வாய்ப்பு இல்லாத இடத்தில் அடித்துவிட்டு, அவசரமாக ஓடி ரன் எடுக்க முயற்சித்த போது வெஸ்ட் இண்டீஸ் வீரர் மேயர்ஸ் விரைவாக பந்தை ஸ்டம்ப் நோக்கி எறிய சாம்சன் ரன் அவுட் ஆகினார். இவர் 51 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். இதில் மூன்று பவுண்டரிகள் மூன்று சிக்ஸர்கள் அடங்கும். 

அடுத்ததாக வந்த தீபக் ஹூடா சிறிது பங்களிப்பை கொடுத்து ஆட்டமிழக்க, படுமோசமான தருணத்தில் உள்ளே வந்த அக்சர் பட்டேல் தனி ஆளாக நின்று 35 பந்துகளில் 65 ரன்கள் விளாசி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். இறுதியில் இவருக்கு ஆட்டநாயகன் விருதும் கொடுக்கப்பட்டது. 

- Advertisement -

முக்கியமான கட்டத்தில் தவறான முடிவு எடுத்து ரன் அவுட் ஆன சஞ்சு சாம்சனின் வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பலரின் விமர்சனத்தையும் பெற்று வருகிறது. குறிப்பிட்ட சம்பவத்தின் வீடியோ பதிவு இதோ..