மின்னல் வேக பவுலர் நோர்க்யாவின் ஓவரில் தொடர்ந்து 5 பவுண்டரிகள் விளாசிய ருத்துராஜ் கெய்க்வாட் – வீடியோ இணைப்பு

0
346
Ruturaj Gaikwad

ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்தியா வந்திருக்கிறது தென்ஆப்பிரிக்க அணி. இதன் முதல் இரு ஆட்டங்களில் இந்தியா தோற்று இருக்க, இன்று மூன்றாவது ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நடந்தது. தொடர்ந்து மூன்றாவது முறையா டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்தியாவின் பேட்டிங்கை துவங்க வந்த இசான் கிஷான் ருதுராஜ் ஜோடி தென்ஆப்பிரிக்க பந்துவீச்சை விளாசி தள்ளினர். குறிப்பாக ருதுராஜின் பேட்டிங்கில் அனல் பறந்தது. ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காக ஆடுவதுபோல் இருந்தது அவரது ஆட்டம். இஷான் கிஷானும் தன் பங்கிற்கு பவுண்டரி சிக்ஸர் என விளாச, இந்திய அணியின் ஸ்கோர் எகிற தொடங்கியது.

இதில் ஆன்ட்ரிச் நோர்க்யா வீசிய ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரில் ருதுராஜ் தொடர்ந்து ஐந்து பவுண்டரிகளை பறக்கவிட்டு பிரமிப்பூட்டினார். ஆன்ரிச் நோர்க்யா ஆப் ஸ்டம்ப் வெளியே கட் அடித்து முதல் பவுண்டரியையும், அடுத்து இறங்கி வந்து மிட்விக்கெட் திசையில் இரண்டாம் பவுண்டரியையும், அடுத்து உள்ளே பவுன்சராய் வந்த பந்து ஹெல்மட்டோடு உரசி மூன்றாவது பவுண்டரியையும், அடுத்து புல் லென்த்தில் வந்த பந்தை லெக்ஸைட் மிட்விக்கெட்டில் பிளிக் செய்து நான்காவது பவுன்டரியையும், தேர்ட் மேன் பக்கம் தட்டி ஐந்தாவது பவுண்டரியையும் அடித்தார்.

மேற்கொண்டு சிறப்பாக விளையாடி, ருதுராஜ் தனது முதல் சர்வதேச அரைசதமடித்து 35 பந்தில் 57 ரன் அடித்து வெளியேறினார். அடுத்து ஸ்ரேயாஷ் 14 ரன்னில் வெளியேற, 35 பந்தில் 54 ரன் அடித்திருந்த இஷான் கிஷானும் வெளியேறினார். ஒருகட்டத்தில் 220 ரன் வரும் என்ற நிலையில் இருந்த இந்திய அணி, இதற்குப் பிறகு ரிஷாப் பண்ட் 6 ரன், தினேஷ் கார்த்திக் 6 ரன் என வெளியேற, ஹர்திக் பாண்ட்யா 21 பந்துகளில் 31 ரன்கள் அடித்த காரணத்தால், கடைசியாக இருபது ஓவரின் முடிவில் 179 ரன்களையே எடுத்தது.