கடைசி ஓவரில் அதுவும் பும்ரா பந்தில் வித்தியாசமான முறையில் சிக்சர் அடித்த கெய்க்வாட்

0
137
Ruturaj Gaikwad

கொரோனா தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் நேற்று மீண்டும் ஆரம்பமானது. முதல் ஆட்டத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின. ஆட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே மும்பை அணி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. 25 ரன்கள் எடுப்பதற்குள்ளேயே 4 முக்கிய விக்கெட்டுகளை மும்பை அணி வீழ்த்தியது. அதுவும் போக சென்னை அணியின் முக்கிய பேட்டிங் வீரரான ராயுடுவை retired hurt முறையில் பெவிலியன் அனுப்பியது மும்பை அணி. இதனால் மிகவும் மோசமாக ஆடிக் கொண்டிருந்தது சென்னை அணி.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்து கொண்டே இருந்தாலும் மறுபக்கம் சென்னை அணியின் தொடக்க வீரரான ருத்ராஜ் கெய்க்வாட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதலில் சிறிது நேரம் அதிக பந்துகளை எடுத்து குறைவான ரன்களை எடுத்து இருந்தாலும் ஆட்டம் போகப்போக மும்பை அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினார் ருத்ராஜ். 9 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்களுடன் 58 பந்துகளில் 88 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் ருத்ராஜ்.

- Advertisement -

அதிலும் உலகத்தின் இரண்டு மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் ஆன போல்ட் மற்றும் பும்ரா பந்துகளில் அடித்த சிக்சர்களை ரசிகர்கள் தற்போது வைரலாக கொண்டாடி வருகின்றனர். கடைசி ஓவர்களில் ரன்கள் எடுப்பதற்கே மிகவும் கஷ்டமாக இருக்கும் பும்ரா பந்துவீச்சில் backward square திசையில் அற்புதமாக ஸ்வீப் ஷாட் மூலம் சிக்சர் அடித்து ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டார்.

அதிக அனுபவம் அற்ற ஒரு வீரர் இதுபோன்ற ஒரு ஷாட் ஆடி ரசிகர்களை ஆச்சரியப் படுத்தினார். ஏற்கனவே இந்திய அணியில் துவக்க வீரர் போட்டிக்கு பல வீரர்கள் வரிசையில் இருக்கும் பொழுது தற்போது அந்த வரிசையில் ருத்ராஜம் இணைந்துள்ளார். நேற்று அவர் ஆடிய அந்த ஷாட்டை பார்க்கும் பொழுது ஏபி டிவிலியர்ஸ் விளையாடியது போல் இருந்தது என்று பலரும் கூறி வருகின்றனர்.

கடந்த முறை இளம் வீரர்கள் இடம் துடிப்பான ஆட்டம் இல்லை என்று தோனி விமர்சித்ததை அடுத்து சென்னை அணியின் இளம் வீரர்கள் இந்த தொடரில் சிறப்பாக ஆடி வருகின்றனர். இதே போன்ற ஆட்டத்தை இறுதிவரை இந்த தொடரில் இவர்கள் ஆடினால் சென்னை அணி இந்த முறை நிச்சயம் கோப்பை வென்று விடும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -