தனது கடைசி சர்வதேச போட்டியில் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்ட ராஸ் டைலர் – வீடியோ இணைப்பு

0
113
Ross Taylor

நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் தற்பொழுது நடைபெற்றுக் முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி நெதர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி கண்ட நிலையில் இன்று கடைசி போட்டி ஆனா மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தன்னுடைய கடைசி சர்வதேச போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும் ராஸ் டைலர்

நியூசிலாந்து அணியின் முன்னணி கிரிக்கெட் வீரரான ராஸ் டைலர் இன்று தன்னுடைய கடைசி சர்வதேச போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கிறார். இந்த போட்டியுடன் அவர் அனைத்துவித சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக முன்பே அறிவித்து இருந்தார்.

- Advertisement -

அதன்படி இன்று தன்னுடைய கடைசி போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும் அவர் போட்டி தொடங்கும் முன்பு வாசிக்கப்பட்ட தேசிய கீதத்திற்கு கண்ணீர் விட்டார். தன்னுடைய கடைசி போட்டியில் அவர் விளையாடுவதால் சற்று உணர்ச்சிவசப்பட்டு தன் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் காணப்பட்டார்.

அதேபோல நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்த பின்னர் ராஸ் டைலர் பேட்டிங் ஆட மைதானத்திற்குள் நுழைந்தார். நெதர்லாந்து அணி வீரர்கள் அனைவரும் இருபுறமும் நின்று ராஜ வரவேற்பை அவருக்கு கொடுத்தனர். தன்னுடைய கடைசி போட்டியில் அவர் 14 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணிக்கு ராஸ் டைலரின் பங்களிப்பு

112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7683 ரன்கள், 235 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8593 ரன்கள், 102 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 1909 ரன்கள் இதுவரை ராஸ் டெய்லர் குவித்திருக்கிறார். தற்பொழுது வரை நியூசிலாந்து அணிக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் ராஸ் டைலர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமூக வலைதளங்களில் அனைவரும் “வி மிஸ் யூ ராஸ்கோ” என்று தங்களுடைய பதிவுகளை பதிவேற்றி வருகின்றனர்.