கடைசி விக்கெட்டை வீழ்த்தி கொண்டாட்டதுடன் டெஸ்ட்டில் இருந்து விடைபெற்ற ராஸ் டெய்லர் ; ஓய்வுக்கு முன் பேசிய கடைசி வார்த்தைகளின் வீடியோ இணைப்பு

0
1498
Ross Taylor Test Retirement Speech

நியூசிலாந்து அணிக்காக 14 வருடங்களாக டெஸ்ட் போட்டியில் விளையாடி வந்த ராஸ் டைலரின் பயணம் இன்று முடிவடைந்தது. வங்கதேச அணிக்கு எதிராக இன்று நடந்து முடிந்த போட்டியுடன் அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். வங்கதேச அணிக்கு எதிராக இரண்டு 2 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் வங்கதேச அணியும் இன்று 2வது போட்டியில் நியூசிலாந்து அணி வென்றதால், தொடர் 1-1 என்கிற கணக்கில் சமனில் முடிந்தது.

கடைசி நொடியில் விக்கெட் வீழ்த்தி தனது டெஸ்ட் பயணத்தை முடித்த ராஸ் டைலர்

வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்க்ஸ் முடிவில் 6 விக்கெட்டுக்கு 521 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் டாம் லதாம் அதிகபட்சமாக 252 ரன்கள் குவித்தார். தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில் ராஸ் டைலர் 39 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

பின்னர் விளையாடிய வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 126 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் முடிவில் 278 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தது. இறுதியில் நியூசிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

போட்டியின் கடைசி நேரத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற ஒரு விக்கெட் மட்டுமே தேவைப்பட்டது. அப்பொழுது தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய ராஸ் டைலர் பந்து வீச வந்தார். சரியாக 3-வது பந்தில் வங்கதேச அணி வீரரான எபாடத் ஹுசைன் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். 14 வருட டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தில் 7வது முறையாக இன்று அவர் பவுலிங் செய்துள்ளார். அவர் இதற்கு முன் ஹர்பஜன்சிங் ஸ்ரீசாந்த் ஆகியோரின் விக்கெட்டை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

வெற்றியுடன் எனது டெஸ்ட் பயணத்தை முடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி

நியூசிலாந்து அணிக்காக இத்தனை வருடங்கள் விளையாடியது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. என்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியை வெற்றியுடன் முடித்துக் கொள்ளவே நான் விரும்பினேன். வங்கதேச அணி எங்களுக்கு நிறைய நெருக்கடி கொடுத்தனர். இருப்பினும் எங்களது அணி வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து சிறப்பாக விளையாடியதால் போட்டியில் சுலபமாக வெற்றி பெற முடிந்தது. கடைசி டெஸ்ட் போட்டியை வெற்றியுடன் முடித்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

- Advertisement -

தொடர் சமனில் முடிவடைந்துள்ளது. எங்களுக்கு இணையாக போட்டி போட்டு விளையாடிய வங்கதேச அணி வீரர்களுக்கு எனது பாராட்டுக்கள். என்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியை காண இங்கு வந்துள்ள எனது குடும்பம் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி என்று உணர்ச்சி பொங்க ராஸ் டைலர் பேசியுள்ளார்.

நியூசிலாந்து அணிக்காக 113 டெஸ்ட் போட்டிகளில் 7683 ரன்கள் இதுவரை ராஸ் டைலர் குவித்துள்ளார். டிஸ்டிக் ஏரியில் அவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 44.66 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 59.29 ஆகும். ஆஸ்திரேலிய டெஸ்ட் கேரியரில் 19 சதங்கள் மற்றும் 35 அரை குவித்துள்ளார். நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரராக இன்று அவர் தன்னுடைய டெஸ்ட் பயணத்தை முடித்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.