ரோகித் அடித்த சிக்ஸரில் காயம்பட்ட குழந்தை ; முதலுதவி அளிக்க விரைந்து ஓடிய இங்கிலாந்து மருத்துவர்கள் – வீடியோ இணைப்பு

0
589
Rohit Sharma six hit small girl in stadium

இந்தியா இங்கிலாந்திற்கு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்க சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதில் டெஸ்ட் தொடர் சமனில் முடிய, டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது. அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று இலண்டன் நகரின் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது. முதலில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இடுப்பு பகுதி வலியால் விராட்கோலி அணியில் இடம்பெறவில்லை. இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் திரும்பி இருந்தனர்.

- Advertisement -

இன்றைய போட்டிக்கான ஆடுகளத்தில் புற்கள் இருக்க, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சில் அனல் பறந்தது. குறிப்பாக ஜஸ்ப்ரீட் பும்ராவின் பந்துவீச்சில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பெவியனுக்கு நடந்த வண்ணமாய் இருந்தனர். 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த பும்ரா ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றினார். 25.2 ஓவர்களில் இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

இதையடுத்து 111 என்ற எளிய இலக்கை நோக்கி இந்திய துவக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, ஷிகர் தவான் களமிறங்கினார். ஒருமுனையில் ஷிகர் தவான் தடுப்பாட்டம் ஆட, மறுமுனையில் ரோகித் சர்மாவின் ஆட்டம் அதிரடியாய் இருந்தது. டேவிட் வில்லி ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரில் ஒரு பந்தை ஷார்ட்-பந்தாக வீச, அதை மடக்கி ரோகித் சர்மா சிக்ஸருக்கு அடித்தார்.

ரோகித் சர்மா அடித்த இந்த சிக்ஸர் பந்து, மைதானத்தில் போட்டியைக் காண வந்திருந்த ஒரு குழந்தையின் தலையைக் தாக்கியது. உடனே சில நிமிடம் ஆட்டம் நிறுத்தப்பட, உடனே களத்திலிருந்த இங்கிலாந்து அணியினரின் மருத்துவக்குழு அந்தக் குழந்தைக்கு மருத்துவ முதலுதவி அளிக்க விரைந்தது. பின்பு அந்தக் குழந்தையைப் பரிசோதித்து மருத்துவ உதவி செய்யப்பட்டது. பெரியளவில் எந்தக் காயமும் இல்லையென்று தெரிந்தது.

- Advertisement -

அடுத்து தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் ஷிகர் தவான் தடுப்பாட்டத்திலேயே தொடர்ந்து ஈடுபட, ரோகித் சர்மா அதீரடியாய் அரைசதம் அடித்தார். முடிவில் 18.4 ஓவரில் இந்திய அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 5 சிக்ஸர் 7 பவுண்டரிகளோடு 58 பந்தில் 76 ரன்கள் குவித்தார். ஆறு விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ரா ஆட்டநாயகன் விருது பெற்றார். அடுத்த போட்டி நாளை மறுநாள் நடக்க இருக்கிறது!