இந்த இடத்தில் தான் இந்தியாவின் தோல்வி உறுதியானதா? – கோஹ்லி கேட்ச் விட்டபோது அஸ்வின், ரோகித் ரியாக்சன் வீடியோ!

0
2831

விராட் கோலி கேட்ச்-விட்ட இடத்தில் தான் இந்திய அணியின் தோல்வி துவங்கியதா? ட்விட்டர் பக்கத்தில் வச்சு செஞ்ச நெட்டிசன்கள். கேட்ச் விட்ட வீடியோ இதோ..

டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் இந்தியா மற்றும் – தென் ஆப்பிரிக்கா மோதிய போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

- Advertisement -

வழக்கம் போல இந்திய அணிக்கு கேஎல் ராகுல்(9) மற்றும ரோகித் சர்மா(15) இருவரும் நல்ல துவக்கம் அமைத்துக் கொடுக்கவில்லை. இம்முறை விராட் கோலியும்(12) சொற்பரன்களுக்கு ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார்.

சூரியகுமார் யாதவ் மட்டுமே வேறு ஏதோ ஒரு மைதானத்தில் விளையாடுவது போல விளையாடிக் கொண்டிருந்தார். அவர் 40 பந்துகளில் 68 ரன்கள் அடித்தார். இதில் மூன்று சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கும். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவை 133 ரன்களுக்குள் சுருட்டியது.

அடுத்ததாக இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணிக்கும் மிக சிறப்பான துவக்கம் கிடைக்கவில்லை. அர்ஷதீப் சிங் ஒரே ஊரில் டீ காக் மற்றும் ரூஸோவ் இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.

- Advertisement -

மெதுவாக ஆட்டம் இந்திய அணியின் பக்கம் இருந்தது. பத்து ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் மட்டுமே தென் ஆப்பிரிக்கா அணி எடுத்திருந்தது. அதற்கு அடுத்த ஓவரிலிருந்து ஆட்டத்தின் கியரை மாற்றி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

மார்க்ரம் மற்றும் மில்லர் இருவரும் களத்தில் நின்று இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை அப்போது தான் அடிக்க துவங்கினர். நடுவில் மார்க்ரம் சில தவறுகளை செய்து விக்கெட் வாய்ப்பை கொடுத்தார். இந்திய அணியினர் அதை பயன்படுத்தவில்லை.

குறிப்பாக போட்டியின் 12 வது ஓவரை ரவிச்சந்திரன் அஸ்வின் வீசினார். அப்போது மார்க்ரம் கண்ணை மூடிக்கொண்டு தூக்கி அடிக்க முயற்சித்த போது அது கேட்ச் ஆக மாறியது. இந்தியாவின் சிறந்த பீல்டர்களில் ஒருவரான விராட் கோலி அதை பிடிப்பதற்காக நின்றார். யாரும் எதிர்பாராத வகையில் முக்கியமான கட்டத்தில் விராட் கோலி கேட்ச் மிஸ் செய்தார்.

இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதகமாக மாறியது. அதன் பிறகு மார்க்ரம் தன்னுடைய அதிரடியை வெளிப்படுத்தினார். அவர் 41 பந்துகளில் 52 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்

இறுதிவரை களத்தில் நின்ற மில்லர் 56 ரன்கள் அடித்து தென் ஆப்பிரிக்கா அணியின் வெற்றியை உறுதி செய்தார். இருபதாவது ஓவரில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

வீடியோ: