வழக்கம் போல் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்கும் போது பேட்டைப் பறக்கவிட்ட ரிஷப் பண்ட் – வீடியோ இணைப்பு

0
82
Rishabh Pant bat flying in air

நடப்பு ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த இரு அணிகளான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஹெலிகாப்டர்கள் தற்போது விளையாடிக் கொண்டிருக்கின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் விளையாடிக் கொண்டிருக்கும் டெல்லி அணி தற்போது 14 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் குவித்துள்ளது.

டெல்லி அணியின் ஓபனிங் வீரர் பிருத்வி ஷா 29 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 51 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 14 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சர் உட்பட 27 ரன்கள் குவித்துள்ளார். களத்தில் தற்பொழுது டேவிட் வார்னர் 36 பந்துகளில் 56* ரன்கள் எடுத்த நிலையில் ரோவ்மென் போவெல் உடன் இணைந்து விளையாடி வருகிறார்.

வழக்கம்போல ஒற்றைக் கையில் ரிவர்ஸ் ஸ்வீப் அடித்த ரிஷப் பண்ட்

ஆட்டத்தின் பதினோராவது ஓவரை வருன் சக்கரவர்த்தி ரிஷப் பண்ட்டிற்கு எதிராக வீசினார். முதல் பந்தை சிக்ஸராக தூக்கி அடித்த ரிஷப் பண்ட் 2-வது பந்தில் பவுண்டரி அடித்தார். 2-வது பந்தை அவர் முட்டி போட்ட நிலையில் ரிவர்ஸ் ஸ்வீப் அடுத்த காட்சி பார்க்க அபாரமாக இருந்தது. குறிப்பாக அவர் ரிவர்ஸ் ஸ்வீப் அடுத்த வேலையில் அவருடைய பேக் அவரது கையிலிருந்து நழுவி சென்றது.

மட்டை நழுவி சென்றாலும் அவரது மட்டையில் பட்ட பந்து ஷார்ட் தேர்ட் மேனை தாண்டி சுலபமாக பவுண்டரிக்கு சென்றடைந்தது. அவர் அடித்த இந்த பவுண்டரிக்கு மைதானத்திலிருந்த ரசிகர்கள் மிகப்பெரிய ஆரவாரத்தை எழுப்பினார். ரிஷப் பண்ட் அவ்வாறு அடித்த பவுண்டரி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.