நடுவரின் முடிவை ஏற்றக் கொள்ள முடியாமல் சண்டைப் போட்ட டெல்லி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் – வீடியோ இணைப்பு

0
1195
Ricky Ponting fighting with Umpire

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐபிஎல் போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 45 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சர் உட்பட 61 ரன்கள் குவித்தார்.

214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடி கொண்டிருக்கின்றது. 18 ஓவர் முடிவில் 159 ரன்கள் எடுத்த நிலையில் 8 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா அணி தடுமாறிக் கொண்டிருக்கிறது.

சிங்கம் போல கர்ஜித்த ரிக்கி பாண்டிங்

டெல்லி அணி பேட்டிங் விளையாடிக் கொண்டிருந்த பொழுது 19ஆவது ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை ஆஃப் ஸ்டம்ப் பக்கமாக சற்று தள்ளி வீசினார். அந்த பந்து வைட் பந்தாக அறிவிக்கப்பட்டு இருந்திருக்க வேண்டும். ஆனால் கள நடுவர் அந்த பந்து முறையான பந்து என்று கூறி நகர்ந்து சென்றுவிட்டார்.

உமேஷ் யாதவ் யார்க்கர் வீச முயற்சி செய்த பொழுது அது கிரீஸ் லைனிலிருந்து தள்ளி சென்றது. அந்த பந்தை நடுவர் வைட் என்று அறிவிக்காத நிலையில் டாட் பாலாக அது எடுத்துக் கொள்ளப்பட்டது. உடனடியாக டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மைதானத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த மூன்றாவது நடுவர் இடம் சென்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். எப்படி அந்த பந்து வைடாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ரிக்கி பாண்டிங் அவ்வாறு நடுவரிடம் ஆவேசமாக பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.