போட்டிக்கு இடையே ஸ்டேடியத்தில் நடந்த நிச்சயதார்த்தம் ; தன் காதலை வெளிப்படுத்திய பெங்களூர் ரசிகை – வீடியோ இணைப்பு

0
392
Proposal during CSK vs RCB match

ஐ.பி.எல்-ல் ஆட்டங்களுக்குள் இருக்கும் தீ மாதிரியான பரபரப்புகளும், எதிர்பாராத திருப்பங்களும், வீரர்களுக்கிடையேயான மோதல்களும், அவர்களுக்கிடையேயான நெகிழ்வான தருணங்களும் இரசிகர்களுக்கான தீனிகளாக அமையும். இந்த ஐ.பி.எல் சீசனிலும் அதற்கு எந்தப் பஞ்சமும் கிடையாது.

இன்றைய சென்னை பெங்களூருக்கு அணிகளுக்கு இடையே, மஹாராஷ்ட்ராவின் புனே மைதானத்தில் பரப்பபான ஒரு போட்டி நடந்து முடிந்திருக்கிறது. தோனியை மீண்டும் கேப்டனாக பார்ப்பதற்கும், விராட்கோலி மீண்டும் பேட்டிங் பார்மிற்கு வருவாரா என்று இரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.

வாழ்வா சாவா ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பீல்டிங்கை தேர்வு செய்ய, பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர்களான பாஃப், விராட் கோலி, மேக்ஸ்வெல் மூவரும் ஏமாற்றினார்கள். ஆனால் இளம் வீரர்களான பட்டிதார், லோம்ரர் அணியை சிறப்பாக மீட்டெடுத்தனர். தினேஷ்கார்த்திக் இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்ட பெங்களூர் அணி 173 ரன்களை எட்டியது. சென்னை அணிக்கு கான்வோ தவிர யாரும் நிலைத்து நின்று விளையாடததால், சென்னை அணி தோல்வியைத் தழுவி ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பிலிருந்து ஏறக்குறைய வெளியேறிவிட்டது.

இந்த நிலையில் சென்னை அணி பேட்டிங் செய்துகொண்டிருக்கும் போது ஆட்டத்தில் ஹசரங்கா வீசீய 10வது ஓவரின் போது, பெங்களூர் அணி ரசிகை ஒருவர், பெங்களூர் அணி ரசிகருக்கு தன் காதலை மோதிரம் தந்து வெளிப்படுத்த, பெரிய ஆச்சரியத்தில் விழுந்த அந்த இரசிகர் அவரின் காதலை ஏற்றுக்கொண்டார். பரபரப்பான ஆட்டத்திற்கிடையே இந்த நிகழ்வு தனி சுவாரசியத்தைக் கூட்டுவதாய் அமைந்தது!