சதம் அடித்தப் பின் தன் ஆசான் ஷேன் வார்‍னேவுக்கு மரியாதை செலுத்திய ஜடேஜா – வீடியோ இணைப்பு

0
4521
Ravindra Jadeja and Shane Warne

இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டி மார்ச் 4ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 357/6 என முடித்தது. தன் 100வது டெஸ்ட்டில் கோஹ்லி 45 ரன்களில் வெளியேறினார். மேலும், கேப்டன் ரோஹித் 29, மயாங்க அகர்வால் 33, விஹாரி 58, ஸ்ரேயாஸ் ஐயர் 27 ரன்கள் சேர்த்தனர். அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்ட பவுண்டரியும் சிக்ஸரும் விளாசி 96 ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினார். வெறும் 4 ரன்னில் சதத்தை தவறவிட்டு வருத்தத்துடன் கிளம்பினார்.

ஆட்டம் முடிந்து 3 மணி நேரம் கழித்து வந்த செய்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் உலுக்கியது. ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த ஸ்பின் கிங் ஷேன் வார்னே மாரைடிப்புக் காரணமாக இயற்கை எய்தினார். லெக் ஸ்பின் என்றாலே நம் நினைக்கு வரும் வீரரை இழந்துவிட்டோம் என்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 52 வயதே ஆகும் வார்னேவின் ஆத்மா சாந்தியடைய வேண்டினர்.

- Advertisement -

இன்று இரண்டாம் நாள் டெஸ்ட்டில் அனைத்து வீரர்களும் தோள்பட்டையில் கருப்பு பேண்ட் அணிந்து கொண்டு போட்டிக்கு முன் 2 நிமிடம் அஞ்சலி செலுத்தினர். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்து வலுவான ஸ்கோரை எட்டியது. அஷ்வின் தன் பங்குக்கு 61 ரன்கள் அடித்தார். ஜடேஜா அற்புதமாக ஆடி தன் இரண்டாவது சர்வதேச சதத்தை பதிவு செய்தார். வழக்கம் போல தன் ‘ ஸ்வார்ட் ‘ செலிப்ரேஷனை நிகழ்த்தினார்.

தன்னை வளர்த்து ‘ ராக்ஸ்டார் ‘ என பெயரிட்ட வார்னேவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானத்தை நோக்கி வேண்டினார். முதலாய் ஜடேஜாவை ஐ.பி.லில் அறிமுகப்படுத்தி தன் பட்டறையில் பட்டை தீட்டியவர் ஷேன் வார்னே. முதல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜடேஜாவும் வார்னேவும் ஒன்றாக ஆடி கோப்பையை முத்தமிட்டனர். இது குறித்து ஹர்ஷா போக்லேவும் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்தியா 574/8 என்ற நிலையில் டிக்ளர் செய்தது. ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் எடுத்திருந்தார். இதுவே அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். முதல் இன்னிங்சில் இலங்கை அணியை சமாளிக்க இது போதுமானதாக ஸ்கோர் என்று தெரிகிறது.

- Advertisement -