ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லருடன் இணைந்து ஆடுவது குறித்து பேசியுள்ள ரவி அஸ்வின் – வீடியோ இணைப்பு

0
200
Ashwin and Buttler RR

நடைபெற்றுக்கொண்டிருக்கும் மெகா ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரவிச்சந்திரன் அஷ்வின் 5 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது. ஐபிஎல் தொடரில் இதுவரை ரவிச்சந்திரன் அஷ்வின் சென்னை,புனே, பஞ்சாப் மற்றும் டெல்லி அணியில் விளையாடி உள்ளார். ஐபிஎல் தொடரில் இதுவரை 167 போட்டிகளில் 145 விக்கெட்டுகளை இதுவரை அவர் கைப்பற்றியிருக்கிறார் ஐபிஎல் தொடரில் இவருடைய பௌலிங் ஆவெரேஜ் 27.8 மற்றும் பௌலிங் எகானமி 6.91 என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று சென்னை அணியில் அவர் கைப்பற்ற போடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை 5 கோடி ரூபாய்க்கு சுலபமாக கைப்பற்றியது.

உற்சாகமாகப் பேசியுள்ள ரவிச்சந்திரன் அஷ்வின்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தன்னை கைப்பற்றியது குறித்து மிக உற்சாகமாக பேசியுள்ளார். அந்த வீடியோவை ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் ரவிச்சந்திரன் அஸ்வின் “2018 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி என்னை கைப்பற்ற மிகவும் போராடியது ஆனால் அந்த ஆண்டு அது சாத்தியப்படவில்லை. ஆனால் இன்று அது சாத்தியமாகியுள்ளது. நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாட மிகவும் ஆர்வமாக காத்து இருக்கிறேன்.

அந்த அணி வீரர்களிடம் நான் நிறைய உரையாடி இருக்கிறேன் குறிப்பாக கேப்டன் சஞ்சு சாம்சன் இடம் நிறைய விஷயங்களை நான் பகிர்ந்து இருக்கிறேன். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஹாலுடன் இணைந்து பந்து வீச மிக ஆர்வமாக காத்து கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லர் உடன் இணைந்து விளையாட போவதும், அவருடன் டிரஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொள்ள போதும் தனக்கு மிகுந்த ஆர்வத்தையும் சந்தோஷத்தையும் கொடுத்துள்ளது என்றும் அஸ்வின் கூறியுள்ளார்.

2019ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் எதிரெதிர் அணியில் சந்தித்த போட்டியில் இவர்கள் இருவருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மன்கத் முறைப்படி ரவிசந்திரன் அஸ்வின் ஜோஸ் பட்லரை அவுட் ஆக்கியதால் அந்த கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆனால் இன்று இவர்கள் இருவரும் ஒரே அணியில் இணைந்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடும் காட்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.