இந்தியா – தென் ஆப்ரிக்கா டி20யில் ” சி.எஸ்.கே, சி.எஸ்.கே ” என முழக்கமிட்ட ரசிகர்கள் – வீடியோ இணைப்பு

0
91
Crowd chant csk at ranchi

ஐ.பி.எல் தொடர் முடிந்து ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது தென் ஆப்பிரிக்க அணி. இந்தத் தொடரின் முதல் மூன்று ஆட்டங்களில் முதலிரண்டு ஆட்டங்களை தென் ஆப்பிரிக்கா வென்றது. ஓடிஷா மாநில கட்டாக்கில் நடந்த மூன்றாவது போட்டியில் இந்தியா வெல்ல, தொடரில் 2-1 என தென் ஆப்பிரிக்க அணி முன்னிலையில் இருந்தது.

இந்த நிலையில் இந்தத் தொடரின் நான்காவது போட்டி நேற்று குஜராத் மாநில ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. தொடர்ந்து நான்காவது முறையாக டாஸில் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா இந்த முறையும் பந்துவீச்சையே தேர்ந்து எடுத்தார்.

- Advertisement -

முதலில் ஆடிய இந்திய அணியின் ருதுராஜ், இஷான் கிஷான், ஸ்ரேயாஷ், கேப்டன் ரிஷாப் பண்ட் என வரிசையாகத் தடுமாறி ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக் ஜோடி அதிரடியாய் 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. குறிப்பாக தினேஷ் கார்த்திக் 27 பந்துகளில் 65 ரன்கள் குவித்து அசத்தினார். ஹர்திக் பாண்ட்யா 31 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். இருபது ஓவர்களின் முடிவில் இந்திய அணி 169 ரன்களை சேர்த்தது.

இதற்கடுத்து 170 ரன் என்ற இலக்கை நோக்கி விளையாடி தென் ஆப்பிரிக்க அணியில் காயம் காரணமாக கேப்டன் டெம்பா பவுமா வெளியேறினார். குயின்டன் டிகாக்கை ஹர்சல் படேல் ரன் அவுட் செய்ய, ஆவேஷ்கான் டிவைன் பிரட்டோரியசை வழியனுப்ப, பவர்ப்ளேவில் 35 ரன்களையே எடுத்தது தென் ஆப்பிரிக்க அணி. இதற்கடுத்து அபாயகரமான டேவிட் மில்லரை ஹர்சல் படேல் கிளீன் போல்டாக்கியும், ராஸி வான்டர் டெசனை ஆவேஷ்கானும், ஹென்றி கிளாசனை சாஹலும் ஆட்டமிழக்க வைக்க, ஆட்டத்தில் இந்திய அணியின் கை ஓங்கியது. இறுதியாக தென் ஆப்பிரிக்க அணியை 87 ரன்களுக்கு சுருட்டி, 82 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகன் விருது வென்றார்!

இந்த ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்றது. இந்த ஆண்டு ஐ.பி.எல் சீசனை குஜராத் டைட்டன்ஸ் அணியே சாம்பியன் பட்டத்தையும் வென்று இருந்தது. ஆனால் போட்டி நடந்துகொண்டிருக்கும் பொழுது, மைதானத்தில் இரசிகர்களின் சி.எஸ்.கே சி.எஸ்.கே என்ற கோசம் சத்தமாக ஒலித்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இது நிச்சயம் சி.எஸ்.கே அணி உரிமையாளரை, வீரர்களை மகிழ்ச்சி அடையவே செய்திருக்கும்!

- Advertisement -