சஞ்சு சாம்சன் – ராஜஸ்தான் ராயல்ஸ் அட்மின் தகராறு ; எல்லாமே நாங்கள் நடத்திய நாடகம் தான் – வீடியோ இணைப்பு

0
73
Sanju Samson Rajasthan Royals Prank

நேற்று சமூக வலைதளங்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் பற்றிய பேச்சு அதிகமாக இருந்தது. நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் டிவிட்டர் பக்க அட்மின் அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் புகைப்படத்தை எடிட் செய்து பதிவு செய்திருந்தார்.

கூலிங்கிளாஸ் அணிந்தவாறு லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு தலையில் தொப்பியுடன் காதில் ஜிமிக்கி தோடுடன் சற்று நகைச்சுவையாக அந்த புகைப்படத்தில் சஞ்சு சாம்சன் இருந்தார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் வைரலானது.

- Advertisement -
கடுப்பான கேப்டன் சஞ்சு சாம்சன்

அதை புகைப்படத்தில் தான் நகைச்சுவையாக சித்தரிக்கப்பட்டது கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு பிடிக்கவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அட்மின் பதிவு செய்து அந்த பதிவிற்கு எதிர்பதிவு சஞ்சு சம்சன் நேற்று பதிவு செய்தார்.”நண்பர்களுக்குள் இப்படி விளையாட்டுத்தனமாக பதிவுகளை பதிவேற்றி விளையாடுவது சரி. ஆனால் அணி நிர்வாகம் தொழில் முறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு செய்தல் கூடாது என்பது போல” கறாராக பதிவு செய்திருந்தார்.

அதுமட்டுமின்றி இது சம்பந்தமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்திடம் புகார் அளித்ததாகவும் அதனடிப்படையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அட்மின் பதிவிலிருந்து நீக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் மூலமாகவே அறிவிக்கப்பட்டது.

வேலையிலிருந்து செல்வதற்கு முன்னர் கடைசியாக ஒரு முறை இந்த பதிவை நான் பதிவிடுகிறேன் என்று அட்மின் நேற்று மாலை ஒரு வீடியோவை பதிவு செய்தார். அந்த வீடியோவில் அட்மினிடம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் அனைவரும் உரையாடுவது போல் எடுக்கப்பட்டிருந்தது. எப்பொழுதும் வரம்பு மற்றும் விதிமுறையை மீறக் கூடாது என்பது போல் வீரர்கள் அந்த அட்மினுக்கு ஆலோசனை வழங்கினார்.

- Advertisement -
அனைத்தும் நகைச்சுவை கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்டது

இந்நிலையில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு வீடியோவை பதிவு செய்தது. அந்த வீடியோவில் புது அட்மினை தேர்ந்தெடுக்கும் ஆடிஷன் நிகழ்த்தப்பட்டது. அந்த ஆடிஷனில் சஹால், ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மையர் உள்ளிட்ட வீரர்கள் பங்கு கொள்வது போல் அந்த வீடியோ எடுக்கப்பட்டது. இறுதியில் அவர்கள் யாரும் அட்மின் வேலைக்கு சரிப்பட்டு வரமாட்டார்கள் என்று முடிவு செய்து, ராஜஸ்தான் அணி நிர்வாகத்தை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் பழைய அட்மினுக்கு தொலைபேசியில் வேலைக்கு அழைப்பது போல் அந்த வீடியோ முடிக்கப்பட்டது.

இறுதியில் இவை அனைத்தும் குறும்புத்தனமாக நகைச்சுவை கண்ணோட்டத்தில் சித்தரிக்கப்பட்ட ஒரு வீடியோ தான். இதற்கு முழு ஆதரவு கொடுத்த சஞ்சு சாம்சனுக்கும், மற்ற வீரர்களுக்கும் மற்றும் இதற்கு உறுதுணையாக நின்ற மற்றவர்களுக்கும் நன்றி என்பதுபோல் முடிக்கப்பட்டது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அட்மின் செய்த இந்த குறும்புத்தனமான வீடியோவுக்கு வரவேற்பு ஒருபக்கம் கிடைத்து வந்தாலும், அவரை திட்டி தீர்த்த வண்ணம் ஒரு சில ரசிகர்கள் கமெண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.