இந்திய வீரர்கள் அனைவரும் மிஷின்கள் அல்ல ; வேலைச்சுமையை பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கேப்டன் ரோஹித் மற்றும் பயிற்சியாளர் டிராவிட்

0
60
Rahul Dravid and Rohit Sharma

ஐசிசி நடத்தும் சர்வதேச உலக கோப்பை தொடர்களில் 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை இந்திய அணி கடைசியாக வென்றிருந்தது. அதன் பின்னர் கடந்த 8 வருடங்களில் இந்திய அணி எந்த ஒரு ஐசிசி சர்வதேச தொடர் கோப்பையை வெல்லவில்லை. 50 ஓவர் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி தொடர் மற்றும் டி20 உலக கோப்பை தொடர் என அனைத்திலும் இந்திய அணி கோப்பையை வெல்லாமல் ரசிகர்களை கடந்த 8 ஆண்டுகளில் ஏமாற்றி வருகிறது.

இதற்கிடையில் 2019ஆம் ஆண்டு ஐசிசி அறிமுகம் செய்த உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி ஐசிசி டெஸ்ட் மேஸ்ஸை வெல்லும் வாய்ப்பை இழந்தது. தற்போது இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல இந்திய அணியின் புதிய டி20 போட்டிகளுக்கான கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணிக்கென ஒரு வியூகத்தை அமைக்க வேண்டும் – ரோஹித் ஷர்மா

T20 அவர்களைப் பொறுத்தவரையில் இந்திய அணி நிற்க பலமுறை அணி அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் ஐசிசி நடத்தும் சர்வதேச உலக கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்ல தவறி வருகிறது. இனி நாங்கள் மற்ற அணிகளின் வியூகத்தை பின்பற்றி விளையாடாமல் எங்களுக்கு என ஒரு தனி வியூகத்தை அமைத்துக் கொள்ளப் போகிறோம் என்று ரோஹித் ஷர்மா கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் இனி இந்திய வீரர்களின் வேலைப்பளுவை குறைப்பதில் முழு கவனம் செலுத்தப் போவதாக கூறியுள்ளார். வீரர்கள் தொடர்ந்து விளையாட அவர்கள் ஒன்றும் இயந்திரம் கிடையாது. நீண்ட நாட்களாக விளையாடும் வீரர்களுக்கு இனி தேவைப்படும் ஓய்வு அளிக்கப்படும். ஒவ்வொரு வீரரும் மனதளவிலும், உடலளவிலும் 100% சரியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க போகிறோம் என்றும் கூறியுள்ளார்.

ஒவ்வொரு வீரரின் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வருவேன் – டிராவிட்

அண்டர் 19 அணிக்கு கொடுத்த பயிற்சியை அப்படியே இந்திய அணி வீரர்களுக்கு கொடுக்கப் போவதில்லை. ஒவ்வொரு இந்திய அணி வீரரின் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வருவதில் என்னுடைய முழு கவனம் இனி இருக்கும். ஃபுட்பால் ஆட்டத்தில் கூட தலைசிறந்த வீரர்கள் எல்லா போட்டியிலும் பங்கெடுத்து விளையாடுவதில்லை.

அதேபோல இனி இந்திய வீரர்களுக்கு முறையான ஓய்வு அளிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்க போகிறோம். ஐசிசி நடத்தும் சர்வதேச தொடர்கள் வரும் நிலையில் ஒவ்வொரு வீரரும் ஃபிட்டாக இருக்க வேண்டும். எனவே அவர்களின் உடல் மற்றும் மன வலிமையை நிலையாக வைத்துக் கொள்ள வேண்டிய அனைத்து கட்ட நடவடிக்கைகளை இனி எடுப்போம் என்று ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.