பந்தை கீப்பரிடம் தூக்கிப் போடுவதற்கு பதிலாக டிரெண்ட் போல்ட்டின் காலில் எறிந்த பிரசித் கிருஷ்ணா ; உடனே சுருண்டு விழுந்த போல்ட் – வீடியோ இணைப்பு

0
493
Prasidh Krishna hits Trent Boult leg while fielding

ஐபிஎல் 47வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் நிதானமாக ஆடி அரை சதம் கடந்தார். இறுதியில் ஹெட்மேயர் அதிரடியாக ஆடி 13 பந்தில் 27 ரன்கள் சேர்த்து அணியை 152 ரன்கள் வரை அழைத்துச் சென்றார்.

ராஜஸ்தான் அணியின் பேட்டிங் பலத்திற்கு இது குறைவான ஸ்கோர் தான். இதைக் கட்டுப்படுத்த பவுலர்களும் ஃபீல்டர்களும் தங்களது 100 சதவீத ஆட்டத்தைக் கொடுத்து போராட வேண்டும். தொடக்கத்தில் டிரென்ட் போல்ட் மற்றும் பிரசித் கிருஷ்ணா தங்களுடைய பணியை சிறப்பாகச் செய்தனர். அவர்களின் வேகத்திற்கு முன் கொல்கத்தா துவக்க வீரர்கள் தடுமாறினார். இவர்களுடன் குல்தீப் சென்னும் இணைந்து சிறப்பாக பந்து வீசினார். கடுமையான ஆட்டத்திற்கு இடையே ஓர் கலகலப்பான சம்பவம் நடந்தது.

- Advertisement -

மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் தமிழக வீரர் பாபா அப்பராஜித், மிட் ஆன் திசையில் தட்டிவிட்டு வேகமான சிங்கிள் எடுக்க முயன்றார். அப்போது அங்கு ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த கிருஷ்ணா, பந்தை வேகமாக எடுத்து விக்கெட் கீப்பரை நோக்கி வீசினார். ஆனால் அது நேராகச் சென்று டிரென்ட் போல்ட்டின் இடது காலில் பட்டது. பந்து காலில் பட்ட மரு நொடியே தவறி கீழே விழுந்தார். பெரிய காயம் இல்லாமல் தப்பித்தது நற்செய்தி.

ஒப்பனர்கள் விரைவில் பெவிலியன் திரும்ப கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் நித்திஷ் ராணா ஜோடி சேர்ந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். ஐயர் 34 ரன்னில் போல்ட்டிடம் வீழ்ந்தார். அதையடுத்து கைகோர்த்த ரின்கு சிங் அதிரடியாக விளையாடி 23 பந்தில் 42 ரன்கள் அடித்தார். பொறுப்புடன் ஆடிய ராணா ஆட்டமிழக்காமல் 48 ரன்கள் சேர்த்தார். 7 விக்கெட் வித்தியாசத்தில் கே.கே.ஆர் அணி ராஜஸ்தானை வென்றது. ஒருவழியாக தொடர் தோல்விகளுக்கு இன்று முற்றுப்புள்ளி வைத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.