பந்து தன்னை நோக்கி வருவதைக் கூட சரியாக கவனிக்காமல் அலட்சியமாக இருந்த மெஹிடி ஹசனின் நெஞ்சில் பலமான அடி – வீடியோ இணைப்பு

0
281
Mehidy Hasan poor fielding

பங்களாதேஷ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தென்ஆப்ரிக்க அணி 220 வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி அபார வெற்றி கண்டது.

தற்பொழுது 2வது டெஸ்ட் போட்டி இந்தியா அணிகளுக்கிடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சில் 453 ரன்கள் குவித்தது. தென்னாபிரிக்க அணியில் அதிகபட்சமாக கேஷவ் மஹராஜ் 84 ரன்கள் குவித்தார்
பின்னர் விளையாடிய பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்சில் 217 ரன்கள் குவித்தது. மாதேஷ் அணியில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹிம் 50 ரன்கள் குவித்தார்.

இரண்டாவது இன்னிங்சில் நடந்த பரபரப்பான சம்பவம்

தென் ஆபிரிக்க அணி அதனுடைய 2வது இன்னிங்சை தொடங்கிய நொடியிலேயே ஒரு பரபரப்பான சம்பவம் நிகழ்ந்தது. எபாடத் ஹுசைன் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரின் 2-வது பந்தை சரல் ஏர்வே ஆஃப் சைட் பக்கமாக லேசாக தட்டி விட்டார். அங்கே மெஹிடி ஹசன் நின்று கொண்டிருந்தார். பந்து நேராக அவரை நோக்கி வந்தது.

தன்னை நோக்கி பந்து வருவதை கவனிக்காமல் அவர் தன்னுடைய இடப்பக்கம் பந்து வருகின்றது என்பது போல பார்த்தார். அவர் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் வந்து அவருடைய வயிற்றுப்பகுதியில் பலமாக பட்டது. பந்து பட்டவுடன் சட்டென்று சுருண்டு விழுந்துவிட்டார்.

உடனடியாக அவருக்கு உரிய சிகிச்சை டிரெஸ்ஸிங் ரூமில் வழங்கப்பட்டது. சில நிமிடங்கள் ஓய்வு எடுத்த பின்னர் மீண்டும் அவர் மைதானத்திற்கு வந்து தன்னுடைய அணிக்கு பந்து வீசினார்.

கிரிக்கெட் போட்டிகளில் இவ்வாறு வினோதமான சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமான விஷயம் என்றாலும் இன்று நடைபெற்றது மிக மிக வினோதமாக இருந்தது என்றுதான் கூறவேண்டும். பந்து தன்னை நோக்கி வருவதைக் கூட சரியாக கவனிக்காமல், அந்த பந்து மூலமாகவே தன்னுடைய வயிற்றுப் பகுதியில் மெஹிடி ஹசன் அடி வாங்கிய வீடியோ சமூக வளைதளத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.

தென்னாபிரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 176 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 413 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியுள்ள பங்களாதேஷ் அணி இரண்டாவது இன்னிங்சில் நான்கு ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்த நிலையில் தற்போது விளையாடி கொண்டிருக்கின்றது