கிரீஸ்க்கு உள்ளேயே வித்தியாசமாக ரன் ஓடி அனைவரையும் சிரிக்க வைத்த ரிஷப் பண்ட – வீடியோ இணைப்பு

0
3003
Pant Running Within the Striker Crease

இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் உள்ள நிலையில், தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி நடைபெறுவதால் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு விளையாடி வருகின்றன.

முதலில் பேட்டிங் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் முடிவில் 223 ரன்கள் குவித்தது,பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 210 ரன்கள் குவித்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 79 ரன்களும் தென்ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக கீகன் பெட்டர்சன் 72 ரன்களும் குவித்தனர்.

இந்திய அணி 2-வது இன்னிங்சை தற்பொழுது விளையாடி முடித்து உள்ளது. 198 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டமிழந்து, தென் ஆப்பிரிக்க அணிக்கு 210 ரன்களை இலக்காக அமைத்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 100* ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

வழக்கம் போல சேட்டையை காண்பித்த ரிஷப் பண்ட்

ஆட்டத்தின் அறுபதாவது ஓவரை ரபாடா வீசினார். அப்பொழுது இந்திய அணி 182 ரன்கள் குவித்து 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ரிஷப் பண்ட் மற்றும் முகமது ஷமி விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை மேற்கொண்ட ரிஷப் பண்ட் பந்தை நீண்ட தூரம் அடித்தும் ரன் ஓடவில்லை.

அவர் ஒரு ரன் எடுக்க முயற்சி செய்தால், காகிசோ ரபாடா பந்துவீச்சில் முகமது ஷமி விக்கெட்டை இழக்க நேரிடும். எனவே அவர் ரன் ஓடாமல் அங்கேயே தனது சேட்டையை செய்தார். நான் ஸ்ட்ரைக்கர் கிரீஸ்சுக்கு ஓடுவதற்கு பதிலாக, பாயிண்ட் திசை பக்கமாக ஓடி ரன் எடுப்பது போல் பாவனை செய்து மீண்டும் ஸ்டம்ப் பக்கம் வந்தார்.

விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் இவ்வாறு ஜாலியாக சேட்டை செய்த காட்சி அனைத்து ரசிகர்கள் மற்றும் சக வீரர்களை சிரிக்க வைத்தது. அவர் அவ்வாறு சேட்டை செய்த வீடியோ தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.