சிவில் கவுசிக் போலவே பிக் பேஷ் லீக் தொடரில் வினோதமாக பந்து வீசிய பாகிஸ்தான் ஸ்பின்னர் சையத் ஃபரிடவுனின் வீடியோ இணைப்பு

0
207
Syed Faridoun Bowling Action

2021-22 பிக் பேஷ் டி20 லீக் தொடர் கடந்த 5ஆம் தேதி தொடங்கியது. லீக் சுற்று போட்டிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இறுதிப்போட்டி 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த டி20 லீக் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ், சிட்னி தண்டர், பிரிஸ்பேன் ஹீட், மெல்போர்ன் ரெனகேட்ஸ், அடிலெய்டு ஸ்டைரக்கர்ஸ், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் என மொத்தமாக எட்டு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இந்த எட்டு அணிகளில் சிட்னி சிக்ஸர்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ்,அடிலெய்டு ஸ்டைரக்கர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் மொத்தமாக மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளன. மறுபக்கம் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், ஹோபர்ட் ஹரிகேன்ஸ், மெல்போர்ன் ரெனகேட்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகள் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளன.புள்ளிப் பட்டியலில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியும், மூன்றாவது இடத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியும், நான்காவது இடத்தில் அடிலெய்டு ஸ்டைரக்கர்ஸ் அணியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

முதல் போட்டியிலேயே தனது வினோதமான பந்துவீச்சின் மூலம் அனைவரையும் கவர்ந்த சையத் ஃபரிடவுன்

லீக் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான சிட்னி சிக்ஸர்ஸ் அணியுடன் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி மோதியது. டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்களை சிட்னி சிக்ஸர்ஸ் அணி குவிக்க, பின்னர் வந்த விளையாடிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி ஆட்டத்தின் 11.1 வது ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 61 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலமாக முதல் போட்டியிலேயே 152 ரன்கள் வித்தியாசத்தில் நடப்புச் சாம்பியன் அணியான சிட்னி சிக்ஸர்ஸ் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி அபார வெற்றி பெற்ற போதிலும் எதிரணியான மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் இருபதே வயதான இடதுகை ஸ்பின் பந்து வீச்சாளரான சையத் ஃபரிடவுனின் வினோத பந்துவீச்சு அனைவராலும் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. பாகிஸ்தானில் லாகூர் நகரத்தில் பிறந்த இவர் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி மூலமாக இந்த ஆண்டு வாங்கப்பட்டார்.

வலது கையில் பேட்டிங் செய்து இடது கையில் பந்து வீசும் திறமை பெற்றவர். இதற்கு முன்பு நாம் பார்த்த பவுல் ஆடம்ஸ் மற்றும் சிவில் கவுசிக் ஆகியோரை போன்றே இவரும் சற்று வித்தியாசமாக பந்து வீசுகிறார். வேகமாக ஓடி வந்து தனது கையை தலைக்கு பின்புறமாக கொண்டு சென்று, பின்னர் லாவகமாக எதிரணி பேட்ஸ்மேனுக்கு எதிராக பந்து வீசுகிறார். இவருடைய பந்துவீச்சு வினோதமான இருந்த போதிலும், சிட்னி சிக்ஸர்ஸ் அனி பேட்ஸ்மேன்கள் எந்தவித சிரமமின்றி விளையாடினார்கள். முதல் போட்டியில் 4 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் கைப்பற்றாமல் 37 ரன்களை அவர் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -