அச்சு அசல் ரவிந்திர ஜடேஜாவைப் போல் பந்துவீசிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி – வீடியோ இணைப்பு

0
1052
Shaheen Afridi bowling like Jadeja

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று கொண்டிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த 4ம் தேதி முதல் 8ஆம் தேதி வரையில் நடைபெற்று முடிந்தது. ராவல்பிண்டியில் நடைபெற்ற இந்த முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் விளையாடிய பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 476 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக அசார் அலி 185 ரன்கள் குவித்தார். பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 10 விக்கெட் இழப்புக்கு 459 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 97 ரன்கள் குவித்தார்.

பின்னர் 2-வது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி எந்தவித விக்கெட்டையும் இறக்காமல் 252 ரன்கள் எடுத்த நிலையில் ஐந்து நாட்கள் முடிவுக்கு வர போட்டி சமனில் முடிவடைந்தது. இரண்டாவது இன்னிங்சில் அதிக பட்சமாக ஷபீக் 136* ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வந்த ஷாஹீன் அப்ரிடி

முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்ற ராவல்பிண்டி மைதானத்தில் இந்த இரு அணி மத்தியிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் மத்தியில் ஒரு விக்கெட்டும் அதிகமான விக்கெட்டை கைப்பற்றிய பந்துவீச்சாளராக ஷாஹீன் அப்ரிடி திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. முதல் டெஸ்ட் போட்டியில் அவர் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

முதல் டெஸ்ட் போட்டி நிறைவு பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டி நாளை கராச்சியில் நடைபெற இருக்கின்றது. இரு அணி வீரர்களும் நாளைய டெஸ்ட் போட்டிக்கு தற்பொழுது பயிற்சி எடுத்துக் கொண்டு வருகின்றனர். பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடியும் வளையப்பயிற்சி தளத்தில் பயிற்சி எடுத்து வருகிறார்.

பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கையில் இந்திய ஸ்பின் பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா போல அவர் பந்துவீசி இருக்கிறார். ரவீந்திர ஜடேஜா லெப்ட் ஆர்ம் ஸ்பின் பந்துவீச்சாளர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் அப்ரிடி ரவீந்திர ஜடேஜா போலவே லெப்ட் ஆர்ம் ஸ்பின் பந்து வீச்சை முயற்சி செய்து அவர் போலவே கச்சிதமாகவும் வீசினார்.

ரவீந்திர ஜடேஜாவின் பந்து வீச்சை கார்பன் காப்பி அடித்திருக்கிறார்

ரவீந்திர ஜடேஜா போல பந்துவீசிய அவரது வீடியோவை விளையாட்டு பத்திரிகையாளர் பரத் சுந்தரேசன் ட்விட்டர் வலைதளத்தில் பகிர்ந்தார். அதில் “ரவீந்திர ஜடேஜா வே சற்று உயரமாக இருந்து பந்து வீசியிருந்தால் எப்படி இருக்குமோ அப்படியே இருக்கிறது” என்று பதிவிட்டு அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.

அந்த வீடியோவுக்கு கீழ் பல ரசிகர்கள் தங்களுடைய கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். ரவீந்திர ஜடேஜா மொஹாலியில் தவறான விமானத்தில் ஏறி கராச்சிக்கு சென்று அங்கே பந்து வீசி இருக்கிறார் என்றும், ஷாஹீன் அப்ரிடி அப்படியே ரவீந்திர ஜடேஜாவின் பந்து வீச்சை கார்பன் காப்பி அடித்து இருக்கிறார் என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.