பாபர் அசாம் சிறந்த வீரரா அல்ல கோலி சிறந்த வீரரா என மைதானத்தில் சண்டை போட்டுக் கொண்ட பாகிஸ்தான் ரசிகர்கள் – வீடியோ இணைப்பு

0
107
Babar Azam Fans vs Kohli Fans PSL

கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த வீரர்கள் நண்பர்களாக இல்லாமல் எதிரிகளாக இருப்பார் என்று பலரும் நினைத்து வருகிறார்கள். அரசியல் மற்றும் மத ரீதியான தாக்குதல்கள் இரண்டு நாட்டு வீரர்களையும் விட்டு வைப்பதில்லை. அரசியல் மற்றும் மத காரணங்களுக்காக இரண்டு நாடுகளும் பிரிந்திருந்தாலும் இரண்டு நாட்டு கிரிக்கெட் வீரர்களும் தற்போது வரை நண்பர்களாகவே பழகி வருகின்றனர். மேலும் பாகிஸ்தானில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு தற்போது ரசிகர்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறார்கள். அதற்கு சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நடந்த ஒரு சம்பவம் அதிகமாக வலு சேர்த்துள்ளது.

விராட் கோலி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி முடித்துள்ளார். 6 போட்டிகளில் ஒரே ஒரு அரை சதத்தை தவிர பெரிதாக இந்த இரண்டு தொடர்களில் விராட் கோலியிடம் இருந்து ரன்கள் வரவில்லை. அதேபோல பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமும் இந்து பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பேட்டிங் மற்றும் கேப்டன்சி என இரண்டிலும் பெரிதாக எதுவும் செய்யவில்லை. மிகவும் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடும் பாபர் அசாம் அணியின் தோல்விக்கு காரணமாக இருக்கிறார் என்று பலராலும் விமர்சிக்கப்பட்டார். கூடவே அவரது கராச்சி கிங்ஸ் அணி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்று மற்ற அனைத்துப் போட்டிகளிலும் தோல்வி பெற்று தொடரை விட்டு வெளியேறி உள்ளது.

இவர்கள் தற்போது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் சீக்கிரம் பழைய ஃபார்முக்கு வருவர் என்று ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். சமூகத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் ஆட்டமொன்றில் இருவரில் சிறந்த வீரர் யார் என்று இரண்டு தரப்பு பாகிஸ்தானியர்கள் வாய்ச்சண்டை போட்டுக் கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு விராட் கோலி அடிக்கப்போகும் அடுத்த சாதம் பாகிஸ்தான் நாட்டில் தான் அமையும் என்று பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் மகிழ்ச்சி பொங்க தெரிவித்திருந்தார். ரசிகர்களின் ஆர்வத்தை பார்க்கும்போது கூடிய விரைவில் இந்தியா-பாகிஸ்தான் தொடர் மீண்டும் தொடங்க வாய்ப்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.