ரன் அவுட் செய்ய வாய்ப்புக் கிடைத்தும் செய்யாமல் மறுத்த நேபால் வீரர் – வீடியோ இணைப்பு

0
2591
Aasif Sheikh refuses to Run Out Ireland Batsman

நேபால் அணியின் விக்கெட் கீப்பர் ஆசிப் ஷேக் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக உள்ளார். கிரிக்கெட் கிரிக்கெட் விளையாட படாத நேபால் நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடும் இவர் தற்போது கிரிக்கெட்டை அதிகம் நேசிக்கும் நாடுகளிலும் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நேபால் மற்றும் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் நடந்த சம்பவம் ஒன்றை ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். பகிரப்பட்டு வரும் அந்த வீடியோவில் முக்கிய கதா நாயகனாக நேபாள அணியின் விக்கெட் கீப்பர் ஆசிப் ஷேக் உள்ளார்.

அயர்லாந்து, ஓமன், நேபால், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 நாடுகள் பங்கேற்கும் டி20 தொடர் தற்போது ஓமன் நாட்டில் நடந்து வருகிறது. தற்போது வரை சுமார் 6 போட்டிகள் நடந்துள்ள இந்த தொடரில் அமீரகம் மற்றும் அயர்லாந்து அணிகள் தலா இரண்டு வெற்றிகளையும் ஓமன் மற்றும் நேபால் அணிகள் தலா ஒரு வெற்றியையும் பதிவு செய்துள்ளன. நேற்று நடந்த கடைசி போட்டியில் நேபால் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஆல்ரவுண்டர் டாக்ரல் 28 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்சில் 18-வது ஓவரை வீசினார் நேபால் அணியின் கமல் சிங். அப்போது ரன் எடுக்க முயற்சிக்கும் போது அயர்லாந்து வீரர் மெக்பிரைன் நேபால் பந்துவீச்சாளர் கமல் சிங் மீது மோதினார். இதன் காரணமாக நிலைதடுமாறி கீழே விழுந்த மெக்பிரைன் சரியான நேரத்திற்குள் கிரீசுக்கு சொல்லவில்லை.

இதன் காரணமாக ரன் அவுட் செய்யும் முயற்சியில் நேபாள வீரர்கள் ஈடுபட்டனர். ஆனால் நேபாள அணியின் விக்கெட் கீப்பர் ஆசிப் ஷேக், அயர்லாந்து வீரர் கீழே விழுந்த காரணத்தினால், ரன் அவுட் செய்யவில்லை. வாய்ப்பிருந்தும் எதிரணி வீரரை அவுட் செய்யாமல் இருந்த நேபால் வீரரின் இந்த குணத்தை, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.