முதல் பந்திலேயே வெங்கடேஷ் ஐயரின் ஸ்டெம்ப்பை தெறிக்க விட்ட நட்ராஜன் ; ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்

0
885
Venkatesh Iyer bowled by Natarajan

2020 ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் 25-வது போட்டி, மும்பையின் ப்ரோபோர்ன் மைதானத்தில் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா அணியும் தற்போது பலப்பரீட்சை நடத்தி வருகின்றன!

ஆடுகளம் வேகப்பந்து வீச்சிற்கு நன்றாக ஒத்துழைப்பதாலும், ப்ரோபோர்ன் மைதானம் கடலுக்கு அருகில் இருப்பதால், பந்துவீச்சில் பனிப்பொழிவு சிரமங்களை உண்டாக்கும் என்பதால், டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வுசெய்தார்.

கொல்கத்தா அணியை எடுத்துக்கொண்டால் அவர்கள் ரகானேவை நீக்கிவிட்டு, ஆரோன் பின்ச்சை அணிக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். ஹைதராபாத் அணி வாஷிங்கடன் சுந்தரை வெளியில் வைத்து ஜெகதீசா சுஜித் என்ற வீரரை கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஆடுகளத்தில் பந்து சீறுவதோடு, ஸ்விங்கும் ஆவதால் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் தடுமாற ஆரம்பித்தார்கள். ஜென்சன் ஆரோன் பின்ச்சை வெளியேற்ற, ஐந்தாவது ஓவரை வீச வந்த நடராஜன், முதல் மூன்று பந்துகளை டாட் ஆக வெங்கடேஷை வைத்து வீசி, நான்காவது பந்தை ஸ்டெம்பிற்குள் ஸீமில் திருப்பி, ஸ்டம்புகள் கலகலக்க வெங்கடேஷை பெவிலியனுக்கு வழியனுப்பி வைத்தார். அடுத்து வந்த நரைன் ஒரு சிக்ஸ் அடிக்க, அடுத்த பந்திலேயே அவரையும் பாயிண்ட் திசையில் கேட்ச் தர வைத்து வெளியைற்றினார். இந்தத் தொடரில் நம்ம நடராஜன் பந்துவீச்சில் பவர்-ப்ளேவிலும் அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது!